Home /News /entertainment /

இணையத்தில் வைரலாகும் ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ!

ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ

ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் காரன் பகுதியில் வாக்கிங் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரைப்படக் கல்லூரியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் ராஜேஷ் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அதற்கான புகைப்படம் வெளியாகியிருந்தது. அதை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.



இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Also read... மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதிராஜா

அதை ஒரு ரசிகர் தன்னுடைய மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கே உரிய வேக நடையுடன் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rajinikanth, Viral Video

அடுத்த செய்தி