நடிகர் அஜித் குமார் தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அது அஜித் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார், ஜிப்ரன் இசையமைக்கிறார்.
இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட்அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்ட நடிகர் அஜித், அவ்வப்போது மோட்டார் சைக்கிள் பயணம் செல்வது வழக்கம். அந்த வகையில் அவர் வாங்கிய BMW பைக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து விழுப்புரம், ஆத்தூர், சேலம், தர்மபுரி வழியாக பெங்களூர் சென்றார். அப்போது அவரின் பைக் பயணம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை அவர் சென்று வந்த இடங்கள் குறித்து சமீபத்தில் ஒரு ரூட் மேப் வெளியானது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு அஜித் மோட்டார் சைக்கிளில் வந்ததாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பவர் அஜித் என்பது உறுதியாக தெரியாதநிலையில் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது எங்கு எடுக்கப்பட்டது என்ற சரியான விவரமும் தெரியவில்லை. ஆனாலும் தற்போது சோஷியல் மீடியாவில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-செய்தியாளர்: செந்தில்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith