சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரன் என்ற வேடத்தில் மாரிமுத்து கலக்கி வருகிறார். ஸ்லாங்கில் அவர் பேசும் விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
அடிப்படையில் இயக்குநரான மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை,ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை செய்திருக்கிறார் மாரிமுத்து.
சமீபகாலங்களில் 'எதிர் நீச்சல்' தொடரில் அவரின் 'ஏ... இந்தாம்மா' என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக வலம் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் ட்விட்டரில் ஆபாச ட்வீட்களுடன் இருக்கும் போலி கணக்கு ஒன்று, மார்டன் உடை அணிந்த பெண் புகைப்படத்துடன் 'Can I Call You' என நடிகர் மாரிமுத்து என்று பெயருள்ள போலி ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு தங்களின் மொபைல் நம்பரை கேட்டு ட்வீட் செய்துள்ளது. அவரது பதிவிற்கு நடிகர் மாரிமுத்து என்ற பெயருடைய ட்விட்டர் ஐடியிலிருந்து நம்பர் பதிவிடப்பட்டிருக்கிறது. இது அவருடைய ஒரிஜினல் ஐடியா இல்லை ஃபேக் ஐடியா என்பது கூட ஆராயாமல் நெட்டிஷன்கள் மாரிமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆகிவந்த நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார் அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு டெலிட் செய்யப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment