Home /News /entertainment /

ஒவ்வொரு சோதனையிலும் மீண்டெழுந்த வலிமை நாயகன் அஜித்குமார்

ஒவ்வொரு சோதனையிலும் மீண்டெழுந்த வலிமை நாயகன் அஜித்குமார்

அஜித்

அஜித்

தமிழ் சினிமா இருக்கும் வரை, அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை கொண்ட வலிமை நாயகனின் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    ’அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால், ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தைப் பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் படையை சம்பாதித்த இவர்தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தி.

    1993-ல் தமிழில் ’அமராவதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை. கூடவே இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன. எனினும், இதே துறையில் நிச்சயம் ஒரு நாள் சாதித்துக் காட்டுவேன் என வைராக்கியத்துடன் போராடினார் அஜித். இதன்மூலம், அடுத்து வெளியான ’ஆசை’ திரைப்படம், இவரை ரசிகர்களின் ஆசை நாயகனாக்கியது.

    அஜித்


    'ஆசை’, , ’காதல் கோட்டை’ என கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிய அஜித்துக்கு ’காதல் மன்னன்’, , ’வாலி’, ‘மங்காத்தா’ போன்ற திரைப்படங்கள் மாபெரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தன. இந்த நடிகருக்குள் இப்படியொரு திறமையா என விமர்சகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தார்கள். இன்னொரு பக்கம் தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் வட்டாரமும் உருவாகத் தொடங்கியது.

    தொடர்ந்து ’ தீனா’,’ சிட்டிசன்’ என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித், அதன்மூலம் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தார். எனினும், அதே வேகத்தில் அஜித்தின் திரைப் பயணம் சறுக்கலையும் சந்தித்தது. தொடர் தோல்விகள், கார் ரேஸிங்கில் கூடுதல் கவனம், அதில் ஏற்பட்ட விபத்தில் உடலில் 23 இடங்களில் ஆபரேஷன், அதனால் உடல் எடை அதிகரித்து பொலிவிழந்த தோற்றத்துக்கு மாறியது.

    பில்லா அஜித்


    2003 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான காலகட்டம் அஜித்துக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்தது. எனினும், ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பிருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல் ஆனது. அந்த வகையில், 2007-ம் ஆண்டு ’பில்லா’ திரைப்படத்தின் மூலம், அதிரடியாக கம்பேக் கொடுத்து, தான் விட்டுச்சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார் அஜித்.

    அஜித்


    திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடாமுயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் அஜித். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய அஜித்தின் வலிமை திரைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் ஒரு திருவிழாவுக்கு காத்திருக்கும் சாமி போல் காத்திருப்பதையும் பார்க்கலாம். தமிழ் சினிமா இருக்கும் வரை, அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை கொண்ட வலிமை நாயகனின் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actor Ajith, Tamil Cinema, Valimai

    அடுத்த செய்தி