Home /News /entertainment /

நானே வருவேன் படத்திலிருந்து வீரா சூரா பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்

நானே வருவேன் படத்திலிருந்து வீரா சூரா பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்

வீரா சூரா பாடல்

வீரா சூரா பாடல்

வீரா சூரா பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதி, யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் இடம் பெறும் வீரா சூரா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் களைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் வீரா சூரா என்ற பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் நேற்று வெளியிட்டுள்ளனர்.

இதை முன்னிட்டு கலைப்புலி எஸ்.தாணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செல்வராகவன் தனுஷ் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைவரையும் கவரும் என தெரிவித்தார்.

Also read... சமந்தாவின் யசோதா படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? நியூ அப்டேட்

அதேபோல் படத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. அதில் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வதாக கூறினார். இந்த வீரா சூரா பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதியுள்ளார்.  அதேபோல் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி