• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை - சீமானை கிண்டல் செய்த சூர்யா படம்...!

வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை - சீமானை கிண்டல் செய்த சூர்யா படம்...!

சூர்யா சீமான்

சூர்யா சீமான்

சூர்யா தயாரித்திருக்கும் படத்தில் இப்படியொரு காட்சி என்பதால் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் சூர்யாவை வசைபாட ஆரம்பித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீமானைப் போன்ற ஒருவர் அவரது மேனரிசத்துடன், அவரைப் போலவே பேசும் காட்சி சூர்யா தயாரித்துள்ள இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் இடம்பெற்றுள்ளது. 

சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்திருக்கும் படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். எளிய கிராமத்து மனிதர்கள் பின்னணியில் இன்றைய அரசியலை விமர்சிக்கும் திரைப்படம் இது. அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகியுள்ளது

இந்தப் படத்தில் சீமான் போல் தோற்றம் கொண்ட ஒருவர் கரும்பச்சை சட்டையணிந்து பேட்டியளிக்கிறார். சீமானின் பேச்சில் அடிக்கடி வெளிப்படும், இனமானம், தன்மானம், அம்பது வருஷமா தலையில மொளகா அரைச்சிட்டாங், வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை போன்ற ரெடிமேட் வசனங்களை இந்த கதாபாத்திரமும் பேசுகிறது.

Also read... டாக்டர் பட ட்ரெய்லர் வெளியீடும், வதந்தியும்...!

சீமானைப் போலவே அடிக்கடி மூக்கை தடவும் மேனரிசத்தையும் செய்கிறார். இந்த காட்சியின் ஹைலைட், பேட்டியை கவர் செய்யும் தொலைக்காட்சி நிருபர்களில் ஒருவர், இங்க அல்வா கிண்டினது போதும் என்று கேமராமேனை அழைத்துக் கொண்டு கிளம்ப, அந்த நபர் பேட்டியை முடிக்கும் முன்பே மற்ற பத்திரிகையாளர்களும் இடத்தை காலி செய்கிறார்கள்



சூர்யா தயாரித்திருக்கும் படத்தில் இப்படியொரு காட்சி என்பதால் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் சூர்யாவை வசைபாட ஆரம்பித்துள்ளனர். சிலர் சூர்யாவை தெலுங்கர் என விமர்சிக்கவும் செய்துள்ளனர். இந்தப் படத்தால் வார இறுதி வலைத்தளத்தில் சூடுபிடித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: