நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

’JAI HIND INDIA’ பாடலில் நடித்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

news18
Updated: December 7, 2018, 1:00 PM IST
நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான் | நயன்தாரா
news18
Updated: December 7, 2018, 1:00 PM IST
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா, கடந்த மாதம் 28-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு வெகு விமர்சையாக தொடங்கியது. அதில்  பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷிதின் நடனமும், ஏ.ஆர்.ரஹ்மானின் "JAI HIND INDIA" பாடலும் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், "JAI HIND INDIA" பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கவிஞர் குல்சார் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், நகுல் அப்யன்கார் மற்றும் எம்.சிஹீம் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.தேசியக் கொடியின் மூவர்ணங்கள், வண்ண விளக்குகளில் ஒளிர தொடங்கும் இந்த பாடல், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் தத்துவத்தை பறைசாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களும், மதநல்லிணக்கமும் "JAI HIND INDIA" பாடலில் எதிரொலிக்கின்றன.இந்த பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடனமும் ஆடியிருக்கிறார். மேலும் இந்தப் பாடல் ஹாக்கி விளையாட்டுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்குமான பாடல் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Loading...
இந்தப் பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த 19 அடி நீள ராஜநாகம் - வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...