விக்ரமின் 58-வது படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

AR Rahman to compose music for vikram movie | படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது

news18
Updated: July 13, 2019, 12:46 PM IST
விக்ரமின் 58-வது படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரகுமான்
news18
Updated: July 13, 2019, 12:46 PM IST
விக்ரமின் 58-வது படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சாமி 2 படத்தை அடுத்து இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார் விக்ரம். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், ஜூலை 19-ம் தேதி படம் வெளியாகிறது.


இந்தப் படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். இது அவரது 58-வது படமாகும்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: ஸ்லம்டாக் மில்லியனர் நாயகனுடன் ராதிகா ஆப்தே...! இணையத்தில் கசிந்த படுக்கையறை காட்சி

First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...