தர்பாரில் இணைந்தார் கமல்ஹாசன் - ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சீக்ரெட்!

தர்பாரில் இணைந்தார் கமல்ஹாசன் - ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சீக்ரெட்!
தர்பார் போஸ்டர்
  • News18
  • Last Updated: November 6, 2019, 6:07 PM IST
  • Share this:
தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடும் பிரபலங்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.

சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இந்தப் படத்தின் தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது மோஷன் போஸ்டரை வெளியிடும் பிரபலங்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். மலையாள போஸ்டரை நடிகர் மோகன்லாலும், இந்தியில் நடிகர் சல்மான் கானும் வெளியிடுகின்றனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்