ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அர்சனா கல்பாத்தி

அர்சனா கல்பாத்தி

விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தயாரிப்பாளரிடம் யூடிபர் ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரிடம் பிரதீப் ரங்கநாதன் குறித்து கேட்கப்பட்ட கேள்வி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தற்போது தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

பிரதீப்பின் இந்த லவ் டுடே  படம் ஆப் (அ) லாக் என்ற குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அதில் சத்யராஜ் மற்றும் இவானா ஆகியோர் உடன் ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் காதலர்களான பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா ஆகியோருக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து லவ் டுடே திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தயாரிப்பாளரிடம் யூடிபர் ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில், யூடியூப் ரிவியூ எடுக்கும் நபர் ஒருவர் லவ் டுடே படத்தின் தயாரிப்பாளர் அர்சனா கல்பாத்தியிடம் இந்தப்படத்தில இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவா நடிச்சிருக்காங்க அதபத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேள்வி கேட்டனர். அதற்கு சிரித்துக்கொண்டே அர்ச்சனா நாதான்யா ப்ரடியூஸ் பன்னேன் எனக்கு தெரியும்யா என்று கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Archana Kalpathi, Entertainment