மீரா என்ற அந்த தொலைக்காட்சி தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொலைக்காட்சி தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் இதன் கதையையும் குஷ்பு எழுதியுள்ளார்.
பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு முதல் முறையாக தான் நடிக்கும் தொலைக்காட்சித் தொடருக்கு கதை எழுதுகிறார்.
நடிகையாக அறிமுகமான குஷ்பூ, இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்த பிறகு, அவ்னி சினி மேக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார், கலகலப்பு, அரண்மனை போன்ற வெற்றிகரமான சீரிஸ்களை அவ்னி சினி மேக்ஸ் தயாரித்தது. சுந்தர் சி தற்போது இயக்கி வரும் புதிய படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வருகிறது. ஸ்ரீகாந்த், ஜெய், ஜீவா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
சினிமா, சீரியல் என பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் நடித்து வரும் குஷ்பு அத்துடன் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பாக டீக்கடையில் டீ தயாரித்தும், தோசை சுட்டும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் ஒரு புதிய தொலைக்காட்சி தொடரையும் தொடங்கி வைத்தார்.
மீரா என்ற அந்த தொலைக்காட்சி தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொலைக்காட்சி தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் இதன் கதையையும் குஷ்பு எழுதியுள்ளார். நடிகை, தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி குஷ்பு சினிமாவில் செலுத்தும் இன்னொரு பங்களிப்பு இது. அவர் இதுவரை எந்தப் படத்திற்கும், தொலைக்காட்சி தொடருக்கும் கதை எழுதியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஷ்புவின் அரசியல் அனுபவம் அவரை கதாசிரியராக்க பெரிதும் உதவியுள்ளது.
அத்துடன், நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடிக்கும் படத்திலும் குஷ்பூ பிரதான வேடம் ஏற்றுள்ளார். மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.