காஞ்சிபுரத்தில் விஜயின் வாரிசு படத்தை வரவேற்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வைக்கப்பட்ட அரசியல் பேனர் கவனம் ஈர்த்து வருகின்றது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு படக்குழுவினர் மட்டுமின்றி விஜயின் ரசிகர்களும் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் பேனர் வைப்பது போஸ்டர் ஒட்டுவது என சுவாரஸ்யமாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள 10 திரையரங்குகளில் வாரிசு படம் திரையிடப்பட உள்ளதால் விஜய் ரசிகர்களும், மக்கள் இயக்கத்தினரும் போஸ்டர்களையும் பேனர்களையும் வைத்து வருகின்றனர்.
வாரிசு திரைப்படம் வெளீயாகும் காஞ்சிபுரம் பாபு திரையரங்கு வளாகத்தில் பிரம்மாண்டமாக 50 அடி அகலமும் 20 அடி உயரமும் கொண்ட பிளக்ஸ் பேனர் வாரிசு படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த பேனரில் "நீ அமர்ந்தால் நாற்காலியும் தோரணையாக... அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்கள் மகிழ்ச்சியாக 2026...?"
என, 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சூசகமாக குறிப்பிட்டு வாசகம் அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also read... மனைவி சங்கீதாவுடன் ‘வாரிசு’ படம் பார்க்க வந்த நடிகர் விஜய்... தாமதமானதால் படக்குழுவினர் மீது கோபம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
செய்தியாளர்: சந்திரசேகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Varisu, Vijay fans