ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு, வாரிசு படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்!

துணிவு, வாரிசு படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்!

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

சிறப்பு காட்சிகள் திரையிட்ட திரையரங்குகளுக்கு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு மற்றும் வாரிசு படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட்ட திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின.  இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதன் காரணமாக படத்தை சிறப்பு காட்சிகளாக திரையிட திட்டமிட்டனர்.  அதன்படி 11-ம் தேதி இரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு திரைப்படத்தையும்,  அதிகாலை 4 மணிக்கு விஜயின் வாரிசு திரைப்படத்தின்  திரையிட்டனர்.

ஆனால் இதற்கு முன்பு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசு சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.  அந்த நோட்டீஸில் 13-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை என்று குறிப்பிட்டு இருந்தது.  மேலும் பால் அபிஷேகம் உள்ளிட்ட விஷயங்களை செய்யக்கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் 11-ம் தேதி இரண்டு திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.  அத்துடன் அந்த காட்சிகளுக்கு கூடுதலான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு காட்சிகள் திரையிட்ட திரையரங்குகளுக்கு அரசு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றால் திரையரங்குகள் மீது அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also read... தொடர்ந்து 7 வெற்றிப் படங்கள் தந்து சாதனைப் படைத்த டி.ராஜேந்தர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Thunivu, Varisu