• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எதற்கும் துணிந்தவன் எப்போது நிறைவடையும்? - சூப்பர் அப்டேட்!

எதற்கும் துணிந்தவன் எப்போது நிறைவடையும்? - சூப்பர் அப்டேட்!

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவனில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். உடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷிணி, இளவரசு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்து வருகிறார். இதில் எதற்கும் துணிந்தவனை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஆக்ஷன் படமாக இதனை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் காரைக்குடியில் படப்பிடிப்பை தொடங்கினர். ரத்னவேலு எதற்கும் துணிந்தவனுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஷெட்யூல்ட் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை நடக்க உள்ளது. அத்துடன் படத்தின் பெரும்பகுதி முடிக்கப்பட்டுவிடும்.

Also read... நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா இணையும் வெப் தொடர்!

அதன் பிறகு எட்டு தினங்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எதற்கும் துணிந்தவனில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். உடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷிணி, இளவரசு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: