• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஷால் 31 எப்போது நிறைவடைகிறது? - புதிய அப்டேட்!

விஷால் 31 எப்போது நிறைவடைகிறது? - புதிய அப்டேட்!

விஷால்

விஷால்

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. ஆகஸ்ட் 15வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஷால், ஆர்யா நடிப்பில் எனிமி திரைப்படம் விஷாலின் 30 வது படமாக தயாராகியுள்ளது. அவரது 31 வது படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஒரேகட்டமாக படத்தை முடிக்கவிருப்பதாக அப்போது கூறியிருந்தனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை து.பா.சரவணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். நாயகியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். உடன் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர் மனோகர் உள்பட பலர் நடிக்கின்றனர். மலையாளத்தின் முன்னணி நடிகர் பாபுராஜ் இதில் முக்கிய வேடமேற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தயாரிப்பாளராகத்தான் பாபுராஜ் மலையாள சினிமாவுக்கு வந்தார். பிறகு சின்னச் சின்ன வேடங்களில் நடித்தார். வில்லனின் அடியாளாக வந்து, வில்லனாக உயர்ந்து, சால்ட் அண்ட் பெப்பர், ஹனி பீ படங்களில் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து, தற்போது நகைச்சுவை, குணச்சித்திரம் என அனைத்துவகை நடிப்பிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வருடம் வெளியான தில்லீஷ் போத்தனின் ஜோஜி படத்தில் பகத் பாசிலின் மூத்த அண்ணனாக குடிகார கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருந்தார் பாபுராஜ்.  

2002 இல், அப்போது மலையாளத்தில் நாயகி மையப் படங்களில் கலக்கிக் கொண்டிருந்த வாணி விஸ்வநாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பாபுராஜ் இதற்குமுன் ஜனா, ஸ்கெட்ச் என ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். எனினும் அவரது முழுத்திறமை வெளிப்பட்டதில்லை. இப்போது விஷால் 31 இல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

Also read... அதர்வா, ராஜ்கிரண் நடிப்பில் லைகா தயாரிக்கும் படம்...!

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. ஆகஸ்ட் 15வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும்.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தை உடனடியாக தொடங்குகிறார் விஷால். கூடுதல் விவரங்கள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: