Home /News /entertainment /

சாக்லேட் பாய் அசோக் செல்வனும் நான்கு கதாநாயகிகளும் – புதிய படத்தின் டைட்டில் லுக் ரிலீஸ்

சாக்லேட் பாய் அசோக் செல்வனும் நான்கு கதாநாயகிகளும் – புதிய படத்தின் டைட்டில் லுக் ரிலீஸ்

 அசோக் செல்வன்

அசோக் செல்வன்

Ashok selvan: அசோக் செல்வன், நான்கு ஹீரோயின்களுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது.

  • News18
  • Last Updated :
தமிழ் சினிமாவில் அழகான வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். தமிழ்த் திரைப்படங்களின் சாக்லேட் பாய்களில ஒருவாக கூறப்படும் ஸ்மார்ட்டான அசோக் செல்வன் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனத்தைக் கவருந்துள்ளார். அசோக் செல்வனுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி , பல்வேறு வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அசோக் செல்வன், நான்கு ஹீரோயின்களுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது.

அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பையும் தனிப்பட்ட கவனத்தையும் பெற்று வருகிறது . தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மெகா ஹிட் சூது கவ்வும் திரைப்படத்தில் கவனம் ஈர்த்த அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அமேசான் பிரைமில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் இவரின் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியது என்றே கூறலாம். கடவுளே ஆகியவை ரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல, ஜீ பிளக்ஸில் வெளியிடப்பட்ட தெலுங்கு டப்பிங் படமான ‘தீனி’ என்ற திரைப்படத்தில் வித்தியாசமான செஃப் பாத்திரத்தில், பருமனான தோற்றத்தில் அசத்தலாக நடித்திருதார்.

தற்போது ஹாஸ்டல் என்ற திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்த நிலையில், VIacom தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் தான் இவருக்கு நான்கு நாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் தற்பொழுது இதில் நடிக்கும் ஹீரோயின்கள் யார் மற்றும் டைட்டில் லுக் ஆகிய விவரங்கள் வெளியாகியுள்ளன. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புகழ் அழகு ரித்து வர்மா, பொம்மியாக கலக்கிய அபர்ணா பாலமுரளி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியான சிவாத்மிகா மற்றும் நெடுஞ்சாலை புகழ் ஷிவிதா ஆகிய நான்கு பேர் இப்படத்தில் அசோக் செல்வனுடேன் நடிக்கின்றனர்.

நடிகை சிவாத்மிகா பிரபல தென்னிந்திய நட்சத்திர ஜோடியான ராஜசேகர் மற்றும் ஜீவிதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகளின் தேர்வும் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று கூறும் அளவுக்கு அசத்தும் கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை ரா கார்த்திக் என்பவர் இயக்குகிறார்.



இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி அன்று வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Also read... இரண்டு பாகங்களாக வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்...?

இந்தப் படத்தை மட்டுமன்றி இதே போன்ற மற்றொரு படத்திலும் அசோக் செல்வன் நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் ‘மன்மத லீலை’ என்ற அடல்ட் காமடி படத்தில் நடித்து வருகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி