• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனாவுக்கு முன்பும், பின்பும் அக்ஷய் குமார் படங்களின் வசூல் ஒரு பார்வை!

கொரோனாவுக்கு முன்பும், பின்பும் அக்ஷய் குமார் படங்களின் வசூல் ஒரு பார்வை!

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் வெளியான பெல்பாட்டம், மிஷன் மங்களைவிட முதல் ஐந்து தினங்களில் கிட்டத்தட்ட 92 கோடிகள் வசூலில் பின்தங்கியுள்ளது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆகஸ்ட் 19 அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் படம் திரையரங்குகளில் வெளியானது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியாகும் முதல் மெகா இந்திப் படம். இதன் முதல் ஐந்து நாள் வசூல், சிறப்பாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்காத நிலையில், பெல்பாட்டம் டெல்லி, குஜராத் போன்று ஒரு சில பகுதிகளை நம்பியே வெளியானது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு முன் வெளியான அக்ஷய் குமாரின் படத்துக்கும், பெல்பாட்டத்துக்குமான வசூல் வித்தியாசம் எப்படிப்பட்டது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2019 இல் கொரோனா பெருந்தொற்று முன் வெளியான அக்ஷய் குமார் படம், மிஷன் மங்கள். இயக்கம் ஜெகன் சக்தி. பெல்பாட்டம் ஆகஸ்ட் 19 வெளியானால், மிஷன் மங்கள் வெளியானது 2019 ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை.



மிஷன் மங்கள்

வியாழன் முதல்நாள் - 29.16 கோடிகள்

வெள்ளி இரண்டாவது நாள் - 17.28 கோடிகள்

சனி மூன்றாவது நாள் - 23.58 கோடிகள்

ஞாயிறு நான்காவது நாள் - 27.54 கோடிகள்

திங்கள் ஐந்தாவது நாள் - 8.91 கோடிகள்

மொத்தம் - 106.47 கோடிகள்.

2021 ஆகஸ்ட் 19, வியாழக்கிழமை கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான பெல்பாட்டத்தின் முதல் ஐந்து நாள் வசூல்.



பெல்பாட்டம் 

வியாழன் முதல்நாள் - 2.75 கோடிகள்

வெள்ளி இரண்டாவது நாள் - 2.75 கோடிகள்

சனி மூன்றாவது நாள் - 3.25 கோடிகள்

ஞாயிறு நான்காவது நாள் 4.40 கோடிகள்

திங்கள் ஐந்தாவது நாள் 1.90 கோடிகள்

மொத்தம் - 15.05 கோடிகள்.

Also read... "அன்பு மனைவிக்கு நன்றி" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு!

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் வெளியான பெல்பாட்டம், மிஷன் மங்களைவிட முதல் ஐந்து தினங்களில் கிட்டத்தட்ட 92 கோடிகள் வசூலில் பின்தங்கியுள்ளது

தமிழ்நாட்டில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேறு சில மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், பெல்பாட்டத்தின் வசூல் சற்று மேம்பட வாய்ப்புள்ளது. எனினும் சாதாரண தினங்களில் வெளியான படங்களின் திரையரங்கு வசூலில் 20 சதவீதத்தை பெல்பாட்டம் எட்டுவதே கடினம் என்பதையே பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: