Home /News /entertainment /

நடிகர் தம்பி ராமையா மீது ரூ.2 கோடி மோசடி மற்றும் மிரட்டல் புகார்!

நடிகர் தம்பி ராமையா மீது ரூ.2 கோடி மோசடி மற்றும் மிரட்டல் புகார்!

தம்பி ராமையா அவரது மகன் உமாபதி

தம்பி ராமையா அவரது மகன் உமாபதி

அடிப்படையில் இயக்குனரான தம்பி ராமையா நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் உமாபதியும் படங்களில் நடித்து வருகிறார். சில தினங்கள் முன்பு உமாபதி நடித்த தண்ணி வண்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
நடிகர், இயக்குனர் தம்பி ராமையா 2 கோடிகள் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அடிப்படையில் இயக்குனரான தம்பி ராமையா நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் உமாபதியும் படங்களில் நடித்து வருகிறார். சில தினங்கள் முன்பு உமாபதி நடித்த தண்ணி வண்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

2015 இல் சரவணன் என்பவர் உமாபதியை வைத்து படம் பண்ண தம்பி ராமையாவை அணுகியிருக்கிறார். படத்தின் தயாரிப்பு பொறுப்பு அனைத்தையும் தான் மேற்கொள்வதாக தம்பி ராமையா உறுதி அளிக்க சரவணனும் படத்தை தயாரித்துள்ளார். ஐந்து வருடம் அண்டர்புரொடக்ஷனில் இருந்த படம் ஒருவழியாக 2020 இல் தயாராகியிருக்கிறது.

Also read... புத்தாண்டை ஒன்றாக கொண்டாடிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி

ஆனால், படம் இன்னும் வெளியாகவில்லை. தம்பி ராமையாவும், படத்தின் நாயகனான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் படம் வெளிவர ஒத்துழைப்பு அளிக்காததால் தனக்கு இதுவரை இரண்டு கோடிகள் நஷ்டமானதாக சரவணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

Also read... மீண்டும் வில்லனாகும் செல்வராகவன்...!

படம் இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டால் மிரட்டுகின்றனர் எனவும் தனது புகாரில் சரவணன் குறிப்பிட்டுள்ளார். தம்பி ராமையா இந்த குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை இன்று அளிக்கக்கூடும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி