Home /News /entertainment /

தி கிரே மேன் படத்திலிருந்து வெளியானது தனுஷின் மாஸ் சண்டைக்காட்சி!

தி கிரே மேன் படத்திலிருந்து வெளியானது தனுஷின் மாஸ் சண்டைக்காட்சி!

தனுஷின் தி கிரே மேன் போஸ்டர்

தனுஷின் தி கிரே மேன் போஸ்டர்

இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
    ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தில் நடிகர் தனுஷ் நடித்த சண்டைக்காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நானே வருவேன் என்ற திரைப்படம், ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் இதற்கு சார் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

    இதேபோன்று சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற தனுஷ் நடிக்கும் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    Also read... தனுஷ் படத்தில் நடிக்கும் சார்பாட்ட பரம்பரை பட நடிகர்

    இந்நிலையில், ஹாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் தற்போது தி கிரே மேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Dhanush (@dhanushkraja)






    அதன் தொடர்ச்சியாக தி கிரே மேன் படத்தில் தான் சண்டையிடும் காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டுவருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி