ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு - துணிவு படங்கள் சிறப்பு காட்சிகள்... அச்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்!

வாரிசு - துணிவு படங்கள் சிறப்பு காட்சிகள்... அச்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்!

துணிவு - வாரிசு

துணிவு - வாரிசு

வாரிசு துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை ஒரே நேரத்தில் நிறைய இடங்களை தவிர்க்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு ஒரே நேரத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டால் ரசிகர்களுக்குள் பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 11ம் தேதி வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களையும் சரிசமமான திரையரங்குகளில் வெளியிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இரண்டு திரைப்படங்களுக்கும் தலா 480 திரையரங்குகள் கிடைக்கலாம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறுகின்றனர். அதேசமயம் ஏதாவது ஒரு திரைப்படத்திற்கு 5% அதிகம் அல்லது குறைவாக கிடைக்க வாய்ப்பிருப்பதாக சுட்டிகாட்டுகிறார்கள்.

விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழந்துள்ளது. சமூக வலைத்தளம் போஸ்டர் என பல்வேறு வகையில் தங்களுடைய போட்டியை இரு ரசிகர்களும் காண்பித்து வருகின்றனர். இதனால் எந்த படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் நிலவி வருகிறது.

இரண்டு திரைப்படங்களும் தலா 480 திரையரங்குகளில் வெளியானாலும், சிறப்பு காட்சிகளை தனித்தனி நேரத்தில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். உதாரணத்திற்கு வாரிசு திரைப்படத்தை இரவு 1 மணிக்கு அனைத்து திரையரங்களிலும் திரையிட்டால், 4 மணிக்கு துணிவு திரைப்படத்தை அனைத்து திரையரங்களிலும் திரையிடலாம் என தெரிவிக்கின்றனர். இதன் மூலம் வசூலும் அதிக அளவில் இருக்கும். அதே சமயம் விஜய் அஜித் ரசிகர்களுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் எண்ணுகின்றனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் யோசனை ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய் தன்னுடைய திரைப்படத்தை இரவு 1 மணியிலிருந்து தொடர்ந்து திரையிட வேண்டும் என விரும்புகிறார் என கூறப்படுகிறது. விஜய் முடிவின்படி திரையிடப்பட்டால் இரண்டு தரப்பு ரசிகர்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் கூடுவார்கள், அது பிரச்சனையை உருவாக்கும். மேலும் திரையரங்குகள் சேதமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சிறப்பு காட்சியை எப்படி திரையிடுவது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், இரண்டு படங்களுக்கான முன்பதிவு வரும் சனிக்கிழமை இரவு முதல் தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்கு  பிறகு இருவரும் ஒரே நாளில் மோதிக் கொள்வதால், நிச்சயம் வெற்றியடைந்தே தீர வேண்டும் என அஜித்,  விஜய் எண்ணுவதாக சினிமா துறையினர் கூறுகின்றனர்.

Also read... துணிவு நேரத்தில் ட்ரெண்டாகும் விஸ்வாசம்.. யூடியூப்பில் சாதனை படைத்த அஜித் பட பாடல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Thunivu, Varisu