முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாய் பல்லவி உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்திய ரசிகர்.. வைரல் போட்டோஸ்

சாய் பல்லவி உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்திய ரசிகர்.. வைரல் போட்டோஸ்

சாய் பல்லவி

சாய் பல்லவி

Sai Pallavi : சாய் பல்லவியின் ரசிகர் ஒருவர் அவரின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  • Last Updated :

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.அதன் பின்பு தெலுங்கிலும் பல படங்கள் நடித்தார்.

தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளியான தியா படம் மூலம் அறிமுகமானார். மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் நடிகர் ராணாவுடன் சாய் பல்லவி இணைந்து நடித்த விரட்ட பர்வம் படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை.

சமீபத்தில் சாய் பல்லவி ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தினார்.காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் அந்தக் காலக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.அது வன்முறை என்றால், பசுவை அழைத்துச் செல்லும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி சென்றதும் தவறு தான் என்று தனது கருத்தை கூறினார். இதற்கும் காஷ்மீரில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.சாய் பல்லவியின் கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் அவர் பேசியது தவறு என்றும் கூறி வருகின்றனர்.

also read  : வேற லெவல் ஹாட் லுக்கில் ஜான்வி கபூர்.. வைரல் போட்டோஸ்

இந்நிலையில் சாய் பல்லவியின் தீவிர ரசிகர் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்தியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

top videos

    இந்த டாட்டூவை பார்த்து மகிழ்ச்சியடைந்த சாய் பல்லவி அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

    First published:

    Tags: Actress sai pallavi, Album