ஊரடங்கில் 900 கி.மீ பயணித்து ராஷ்மிகாவை பார்க்க சென்றிருக்கிறார் ரசிகர் ஒருவர்.
கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனாலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான டாப் டக்கர் எனும் ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு சமயத்திலும் ராஷ்மிகா மந்தனாவை சந்தித்தே ஆக வேண்டும் என ரசிகர் ஒருவர் 900 கிலோ மீட்டர் பயணம் செய்து அவரை பார்க்கச் சென்றுள்ளார். தெலுங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர் ரஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகர். இவர் தான் இந்த ஆச்சரிய செயலை செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆகாஷ் திரிபாதியின் வீடு தெலுங்கானாவில் உள்ளது. அங்கிருந்து கர்நாடகாவில் இருக்கும்
ராஷ்மிகாவின் வீட்டுக்கு வழி நெடுக முகவரியை விசாரித்துக் கொண்டே ஆகாஷ் திரிபாதி செல்ல, நடுவில் சந்தேகப்பட்ட சிலர் போலீசாரிடம் ஆகாஷ் திரிபாதி பற்றி தெரிவித்துள்ளனர்.
இதனால்
ஆகாஷ் திரிபாதியை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவரை விசாரித்துள்ளனர். அப்போது விபரங்களைக் கூறிய ஆகாஷிடம், கர்நாடகாவில் ராஷ்மிகா மந்தனா இருக்கும் பகுதியில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தற்போது அங்கு செல்ல முடியாது என்றும், அதோடு ராஷ்மிகா இப்போது
மும்பையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த ஆகாஷ் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும், ராஷ்மிகாவுக்கு இப்படியொரு ரசிகரா என ஆச்சர்யமடைந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.