ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீ தளபதி... தீக்குச்சிகளால் நடிகர் விஜயின் உருவப்படத்தை வரைந்த ரசிகர்!

தீ தளபதி... தீக்குச்சிகளால் நடிகர் விஜயின் உருவப்படத்தை வரைந்த ரசிகர்!

தீ தளபதி

தீ தளபதி

மதுரையை சேர்ந்த சிராஜுதீன் என்ற ரசிகர் பத்தாயிரம் தீக்குச்சிகளால் நடிகர் விஜயின் உருவப்படத்தை வரைந்து, பின் அந்த தீக்குச்சிகளில் தீப்பற்ற வைத்து தீயில் நடிகர் விஜயின் முகம் தெரியும்படியாக ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு பத்தாயிரம் தீக்குச்சிகளால் நடிகர் விஜயின் உருவப்படத்தை வரைந்து தனது அன்பை வெளிப்படுத்திய மதுரை ரசிகர்.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் நாளை 11-ம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் ரசிகர்கள் பல்வேறு விதமாக படத்திற்கு விளம்பரம் செய்து வரவேற்று வருகின்றனர்.

மேலும், மதுரையை சேர்ந்த சிராஜுதீன் என்ற ரசிகர் பத்தாயிரம் தீக்குச்சிகளால் நடிகர் விஜயின் உருவப்படத்தை வரைந்து, பின் அந்த தீக்குச்சிகளில் தீப்பற்ற வைத்து, தீயில் நடிகர் விஜயின் முகம் தெரியும்படியாக ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார்.

சுமார் 6 மணி நேர முயற்சியில் அவர் செய்துள்ள இந்த வீடியோவை,

இது தளபதியின் தீ ரசிகனின் அன்பு என்று விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Also read... WATCH - 'நாட்டுக்காக யோசிப்பவன்..' ஜெய்ஹிந்த் வார்த்தையுடன் அதிரடியாக வெளியான பதான் டிரைலர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Varisu, Vijay fans