ஜென்ஸி என்றதும் அவரது ரசிகர்களுக்கு நினைவில் மோதும் முதல் பாடல், தெய்வீக ராகம். இளையராஜா இசையில், உல்லாசப் பறவைகள் படத்தில் இடம்பெற்ற, இப்பாடலின் மெட்டும், வரிகளும், ஜென்ஸியின் காந்தக் குரலும் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காதது.
காதல் கொண்ட இளம்பெண்ணின் மோகத்தையும், தாபத்தையும் தனது மெட்டிலேயே கொண்டு வந்திருப்பார் இளையராஜா. பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகள் மெட்டை மேலும் சிறப்புறச் செய்தது என்றால், அதனை ஓர் இறகைப் போல ஆகாயத்தில் உயரப் பறத்தியது ஜென்ஸியின் குரல். பாடலின் ஆரம்பத்தில் வரும் மோகன ஹம்மிங்கும், இசையும் எப்போது கேட்டாலும் நம்மை இன்னொரு உலகத்துக்கு அள்ளிச் செல்லும். இசையில்லாமல் தனியாகப் படித்தாலும் சுவைக்கக் கூடியது பஞ்சு அருணாசலத்தின் பாடல் வறாகள்.
ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம்.ஓ.ஓ.
ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம்.ஓ.ஓ..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்
ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்..ஓஓ..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
செந்தாழம் பூவை கொண்டு
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூர பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா சீராட்ட வா
நீ நீந்த வா என்னோடு
மோகம் தீருமே.
ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம்.ஓ.ஓ..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்.
தந்தனனதந்தனன..
தந்தனன..னா
தனதந்தானானா தந்தானானா
தந்தனன..தந்தனன..தந்தனன..னா.
தந்தனன..தந்தனன..தந்தனன..னா.
தழுவாத தேகம் ஒன்று
தனியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு..
பூமஞ்சமும் .தேன்கிண்ணமும்
நீ தேடி வா ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா..
ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம்.ஓ.ஓ..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்.
ம்ம்ம்.ம்ம்ம்ம்ம்.ஓஓ..
ம்ம்ம்.ம்ம்ம்ம்ம்.ஓ.ஓ..
இந்தப் பாடலை கிராமத்துப் பின்னணியில் தீபாவின் சொக்க வைக்கும் அழகுடன் எடுத்திருப்பார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார். கதைப்படி தீபா கமலின் காதலி. அவர் தீ விபத்தில் இறந்துவிட, காதல் துயரும், தீ விபத்து அதிர்ச்சியுமாக கமலுக்கு புத்தி பேதலித்துவிடும். அவரைக் குணப்படுத்த அவரது பணக்கார தந்தை கமலை வெளிநாடு அனுப்பி வைப்பார். அங்கு வரும் துறுதுறு இளைஞிதான் ரதி அக்னிகோத்ரி.
பெரும்பாலான காட்சிகள் ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா என வெளிநாடுகளில் எடுக்கப்பட்டன. இதுவே படத்துக்கு ஓர் அந்நியத்தன்மையை தந்தது. படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பி., ஜானகி பாடிய ஜெர்மனியின் செந்தேன் மலரே, ஜானகி பாடிய அழகு ஆயிரம் பாடல்கள் இளையராஜாவின் சிறப்பான பாடல்களில் முக்கியமானவை.
1980 இல் வெளியான உல்லாசப் பறவைகளை இந்தியில் தூ தில் தீவானே என்ற பெயரிலும், தெலுங்கில் பிரேம பிச்சி என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். கமல், சிறந்த பாடல்கள், வெளிநாட்டு லொகேஷன் என பல இருந்தும் உல்லாசப் பறவைகள் வெளியான நேரத்தில் சுமாராகவே போனது.
1980 மார்ச் 7 ஆம் தேதி வெளியான உல்லாசப் பறவைகள் தற்போது 43 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema