• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிங்கள பாடகிக்கு வாய்ப்பு - ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஈழத்தமிழர்கள் கண்டனம்

சிங்கள பாடகிக்கு வாய்ப்பு - ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஈழத்தமிழர்கள் கண்டனம்

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் யோகானி

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் யோகானி

பாடகி யோகானி சிங்கள இராணுவத் தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள். சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடத்திய இன அழிப்புப் போரை புகழ்ந்து பாடல்கள் பாடியவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீபத்தில் பிரபலமான சிங்களப் பாடகி யோகானி. அவரை தனது படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதற்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கும் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வைரமுத்துவும், அவரது மகன் மதன் கார்க்கியும் பாடல்களை எழுதுகின்றனர். அக்டோபர் 6 ஆம் தேதி இந்தப் படத்தின் பாடலொன்று மும்பையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இதற்காக இலங்கையிலிருந்து மும்பை வந்திருந்தார் பாடகி யோகானி . அவரை வைத்து அந்தப் பாடலை ஹாரிஸ் ஒலிப்பதிவு செய்துள்ளார். இந்த பாடல் பதிவின் போது, பாடலை எழுதிய மதன் கார்க்கியும் உடனிருந்தார். ஹாரிஸ், மதன் கார்க்கி, யோகானி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை ஹாரிஸ் இணையத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த செய்தி வெளி உலகுக்கு தெரிய வந்தது.

பாடகி யோகானி சிங்கள இராணுவத் தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள். சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடத்திய இன அழிப்புப் போரை புகழ்ந்து பாடல்கள் பாடியவர். தமிழர் இன அழிப்பை பாடல்களின் மூலம் கொண்டாடியவர். சிங்களர்களின் பெருமையாக அதனை முன் வைத்தவர்.

அப்படிப்பட்டவரை தேடிக் கண்டுபிடித்து வாய்ப்பு வழங்கியிருக்கும் ஹாரிஸுக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல் இலங்கை வாழ் தமிழர்கள் இந்த விஷயத்தில் கருத்து எதுவும் கூறாமல் மௌனமாக உள்ளனர். அவர்களுக்கு இதைவிட பெரிய பிரச்சனைகள் இருப்பதால் இருக்கலாம்

Also read... விஜய் 67 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

சமீபத்தில் ராஜ் & டிகே இயக்கிய தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழப்போராளிகளை தவறாக சித்தரித்தது சர்ச்சையானது. அதில் நடித்த சமந்தாவுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அந்த இயக்குனர்களின் அடுத்த வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிப்பதற்கும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஹாரிஸும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: