தாதா படம் குறித்து நடிகர் யோகிபாபு சர்ச்சை கருத்தை வெளியிட்ட நிலையில் அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனி டைம் மனி ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தாயரித்து இயக்கியிருக்கும் படம் ‘தாதா’. யோகிபாபு, நிதின்சத்யா கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ், கலைப்புலி ஜி.சேகரன் டிரைலரை வெளியிட தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளரும் நடிகருமான பாபுகணேஷ் பேசியதாவது:- ”இந்தப்படத்தில் நடித்த யோகிபாபு, நான் நான்கு சீன்கள்தான் நடித்திருக்கிறேன், ஹீரோவாக நடிக்கவில்லை காமெடியன்தான் என்று பேசி வருகிறார். இது வருத்தமான ஒன்று. நீங்கள் காமெடியன்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் நடித்துள்ள படம் ஓட வேண்டும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கவேண்டும்.
ஒரு படத்தில் கிட்டத்தட்ட 200 பேர் வேலை செய்திருப்பார்கள். அந்த 200 பேரின் குடும்பங்களையும் நினைத்துப்பார்த்து நீங்கள் பேசவேண்டும். இந்தப்படத்தை பெரிய போராட்டத்திற்கு தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் வெளியிடுகிறார்.
தயாரிப்பாளர் மதுரை செல்வம் பேசியபோது, “சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லாமே பெரிய படம்தான். எந்த படத்தில் நடித்தாலும் நடிகர்கள் ஓசியிலா நடிக்கிறார்கள். எல்லா படங்களுமே கேமரா வைத்துதான் எடுக்கப்படுகிறது. எல்லா படங்களும் திரையில்தான் திரையிடப்படுகிறதே தவிர தரையில் இல்லை. கின்னஸ் கிஷோர் தயாரித்துள்ள இந்த ‘தாதா’ வெற்றி படமாக அமைய வாழ்த்துகிறேன்”என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசியபோது, “தாதா என்றால் மஹாராஷ்டிராவில் சிறப்பானவர், மூத்தவர், நன்மை செய்பவர் என்று அர்த்தம். வங்காளத்தில் மரியாதைக்குரியர் என்று அர்த்தம். ஆனால் தமிழில்தான் அதற்கு வேறொரு அர்த்தம் இருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்களும் சால்மன் மீனும் ஒன்று. சால்மன் மீன் ஆற்றில்தான் பிறந்து கடலுக்குப் போகும் பிறகு முட்டையிடுவதற்காக மீண்டும் ஆற்றுக்கே வந்துவிடும்.
அதுபோல்தான் சினிமா தயாரிப்பாளர்கள் எங்கே சென்றாலும் மறுபடியும் சினிமாவுக்கு வந்துவிடுவார்கள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக போராளி இல்லை. அதற்கு காரணம் உறுப்பினர்கள்தான். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் எப்படி போராளி தலைவராக வருவான்?” என்று கேள்வி எழுப்பினார்.
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் பேசியதாவது, “இந்தப்படத்தில் நடித்த நண்பர்கள் யோகிபாபு, நிதின்சத்யா மற்ற நடிகர், நடிகைகள் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கவேண்டும். அவர்கள் வராதது வருத்தம் தரும் நிகழ்வு, கண்டனத்திற்குரிய செயல்பாடு. நான் இந்தப்படத்தை பார்த்துவிட்டேன். இது இரண்டு ஹீரோ கதைதான். யோகிப்பாபு படம் முழுக்க வருகிறார். இந்தப்படத்தில் நடித்துவிட்டு டப்பிங் பேச மறுத்தார். நான்தான்சமரசம் செய்து பேசவைத்தேன். தயாரிப்பாளருடன் என்ன கருத்துவேறுபாடு இருந்தாலும் நீங்கள் நடித்த படம் பற்றி நீங்களே தவறாக பேசக்கூடாது. படம் வெளியாக உதவி புரிந்திருக்கவேண்டும், தயாரிப்பாளரின் கஷ்டத்தில் தோள் கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நடிக்கவில்லை என்று சொல்லி தவிர்க்கக்கூடாது. சினிமாவில் கஷ்டப்பட்டு வளர்ந்துள்ள நடிகர் யோகிபாபு இதுபோல் செய்யக்கூடாது.”
Also read... 'ஒழுக்கத்த விட்டோம் எல்லாம் நாசமா போயிடும்’... சர்ச்சை வசனங்கள் நிறைந்த பகாசூரன் ட்ரெய்லர்!
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கின்னஷ் கிஷோர் பேசியதாவது, “வரும் 9ஆம் தேதி ‘தாதா’ திரைக்கு வருகிறது. ஊடக நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யோகிபாபு 4 சீனில் வருகிறாரா? 40 சீனில் வருகிறாரா என்று நீங்கள்தான் மக்களுக்கு சொல்லவேண்டும். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தில் உதவியாக நின்ற என்னுடைய படவிழாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வராதது வருத்தமளிக்கிறது. யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். ஊடகங்களுக்கு இப்ப சொல்றேன் இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? வியாபார நேரத்தில் படம் வாங்க முன் வந்தவர்களை அவர்களுக்கு போன் செய்து அந்தப் படத்தை வாங்காதீர்கள் என்று கெடுதல் நினைத்தார்.
எனக்கு இன்னொரு படம் படம் நடித்துக்கொடுப்பதாக சொல்லி பணமும் வாங்கியிருக்கிறார். ஆனால் இப்போது அந்த பணத்தையும் தரவில்லை, நடிக்கவும் முன்வரவில்லை. தாதா வியாபாரத்தையும் கெடுத்தார். அதனால் எனக்கு படம் நடித்துக்கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.”விழாவின் முடிவில் மேடையில் இருந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றாக குரல் எழுப்பி யோகிபாபுவுக்கு கண்டம் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Yogibabu