ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அட்லீ இயக்கும் ஜவான் பட கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையா? - தயாரிப்பாளர் சங்கத்திற்கு பறந்த புகார்!

அட்லீ இயக்கும் ஜவான் பட கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையா? - தயாரிப்பாளர் சங்கத்திற்கு பறந்த புகார்!

ஜவான் படத்தில் ஷாரூக்கான்

ஜவான் படத்தில் ஷாரூக்கான்

இது குறித்து வரும் 9-ம் தேதிக்கு மேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்துடையது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அட்லி, பிகில்  திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட் நடிகர்  ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தப் படத்திற்கு ஜவான் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிக்கிறார். இவர்களுடன் சன்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தைத் தவிர்த்து ஷாருக்கான் தற்போது பதான் மற்றும் டுங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இந்த 3 படங்கள் வெளியாக உள்ளதால் ஷாருக்கானின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜவான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்துடையது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்திற்கு மாணிக்கம் நாராயணன் என்பவர் நிதி உதவி செய்திருந்தார். இந்த நிலையில் ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மரணமடைந்துவிட்டார்.  அதனால் அவரின் பட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் உள்ளது.

இந்த நிலையில் மாணிக்கம் நாராயணன் அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படம் பேரரசு திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்படுகிறதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீதான விசாரணை ஒரு 9-ம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பு சங்க நிர்வாகிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Also read... விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் எங்க எப்போ தெரியுமா? - வெளியானது மாஸ் அப்டேட்!

ஏற்கனவே, அட்லீ இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதை பிரச்சனை ஏற்பட்டது.  குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் பெற்று இருந்தார். ஆனால் அதே கதையை மெர்சல் என்ற பெயரில் எடுத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Atlee, Shah rukh khan