ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதயத்தை வசம் செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் திரை இசை பயணம்!

இதயத்தை வசம் செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் திரை இசை பயணம்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

தொடர் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உலக அளவில் ஒரு இசை மேதாவியாக உருவெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழை பொன்னியின் செல்வனின் டீசரிலும் ஒலித்து வாள் வீச்சையும் வென்றது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில், பின்னணி இசையில், இதயத்தை வசம் செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் திரை இசை பற்றிய தொகுப்பு.

மணிரத்ணம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்தில் தன் முதல் இசை பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் அதன் பின் செய்தது அனைத்தும் மாயா ஜாலமே. ‘காதல் ரோஜாவே’ பாடலையும்.. ‘சின்ன சின்ன ஆசை’ பாடலையும் கேட்ட இசை ரசிகர்கள் அவரின் இசையில் வழிந்த சப்தங்களில் கரைய தொடங்கினர்.

ரோஜாவின் இசையில் மயங்கி தெளிய இருந்த தருணம் திருடா திருடா, ஜெண்டில்மேன்.. பம்பாய் படங்களில் இடம்பெற்ற ஒட்டகத்த கட்டிக்கோ.. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, ’உயிரே உயிரே’.. ‘கண்ணாளனே’… ‘’ பாடல்களும் ஏ.ஆர். ரஹ்மானை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக்கியது.

தமிழ் திரை உலகில் இசை வசம் செய்து கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மானை இரு கரம் கொண்டு அணைத்தது பாலிவுட். ரங்கீலா முதல் தற்போது வரை தன் இசையால் பாலிவுட்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்தியாவின் 50 ஆவது ஆண்டு சுதந்திர நாளை ஒட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'வந்தே மாதரம்' என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது.

1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கனவு’ திரைப்படத்திற்கும், 2002 ஆம் ஆண்டு ‘லகான்’ திரைப்படத்திற்கும், 2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும், தேசியவிருதுகள் பெற்று அது முதல் இளைய தலைமுறை கொண்டாடும் இந்தியாவின் இசை வேந்தர் ஆனார்

ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான, துள்ளலான, மெலொடியான பாடல்களை சர்வதேச தரத்தில் அளித்து, தன் பக்கம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை குவிக்க செய்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்தியாவோடு ஏ.ஆர். ரஹ்மான் புகழ் நின்றுவிடாமல் சர்வதேச அளவில் மெல்ல பரவத்தொடங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் பிரபலமாக ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஒரு காரணமானது.

அதுமட்டுமா..? டானி பாயில் என்ற ஹாலிவுட் இயக்குனர் எடுத்த ‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஆங்கிலப் திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதை வென்று உலகளவில் இந்திய இசையை கொண்டு சென்றார்.

Also read... ‘சோழர்களின் ஆட்சிக்காலம்’ – வரவேற்பை பெறும் பொன்னியின் செல்வன் புதிய வீடியோ

விருதை பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய நன்றி உரையில் ’ எல்லா புகழும் இறைவனுக்கே’ என தமிழில் பேசி, தனது தாயை பற்றி குறிப்பிட்டு பேசியது உலக அரங்கில் அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுத் தந்தது.

தொடர் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உலக அளவில் ஒரு இசை மேதாவியாக உருவெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழை பொன்னியின் செல்வனின் டீசரிலும் ஒலித்து வாள் வீச்சையும் வென்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: A.R.Rahman, Entertainment