அரசியல் ரெய்டுகள் களை கட்டி கொண்டிருக்கும் இச்சூழலில் தமிழ் சினிமாவில் இடம்பெற்ற ரெய்டு காட்சிகளைப் பற்றிய ஒரு தொகுப்பு.
ரஜினிகாந்தும், பிரபுவும் இணைந்த கைகளாய் நடித்து வெளிவந்த திரைப்படம் ’குரு சிஷ்யன்’. குருவான ரஜினிகாந்தும் சிஷ்யனான பிரபுவும் வினுசக்கரவர்த்தி வீட்டில் ரெய்டுக்கு போகும் காட்சியை யாராலும் மறக்க முடியாது.
ரெய்டிற்கு பதறும் மனோரமாவிடம் ரஜினி சிபிஐ ஆபீசர் என்பதற்கு பதில் ஏபிசி ஆபீசர் என சொல்வதிலிருந்து, ஜஸ்டிஸ் என்பதற்கு பதில் ஜாண்டிஸ் என சொல்வது வரை அந்த ரெய்டு வேட்டை ரஜினிகாந்த்- பிரபு- மனோரமா மூவரின் சிரிப்பு வேட்டையானது.
சுசி கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் கந்தசாமி. ராபின் வுட் பாணியில் அமைந்த இத்திரைப்படத்தின் கதையில் சிபிஐ அதிகாரி வேடத்தில் ஆசிஸ் வித்யார்த்தி வீட்டில் நுழைவார் விக்ரம். எதுவும் கண்டுபிடிக்க முடியாது என மிதவையில் ஆசிஸ் வித்யார்த்தி இருக்க, ஸ்மார்ட்டான விக்ரமோ தரையில் பதுக்கி வைத்திருந்த பல கோடி சொத்து மதிப்புகள் அடங்கிய டாக்குமெண்ட்டையும், கட்டுக்கட்டான பணத்தையும் கண்டுபிடிக்கும் அந்த காட்சி நிஜ ரெய்டுகளின் நகலாகவே அமைந்திருக்கும்.
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம், தானா சேர்ந்த கூட்டம். சி.பி.ஐ வேலைக்கு முயற்சி செய்யும் சூர்யாவிற்கு அத்துறையில் மேலதிகாரியாக இருக்கும் ஒருவரின் சுயநலத்தால் வேலை கிடைக்காமல் போய்விடும்.
Also read... இணையத்தில் வைரலாகும் பிரசாந்த் படத்தின் பாடல்
அதன்பின் சூர்யா தன்னுடன் போலி சி.பி.ஐ அதிகாரிகளாக ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர் ஆகிய நால்வரையும் வைத்துக்கொண்டு, கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகளாக நடித்து, ரெய்டுகள் நடத்துவதை ரசிக்கவே செய்தது தமிழ் சினிமா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பைரவா திரைப்படத்தில் ஜெகபதி பாபு வீட்டில் விஜய் நடத்திடும் ரெய்டு… ’அருவம்’ திரைப்படத்தில் உணவு பொருட்களில் கலப்படத்தை தடுக்க சித்தார்த் நடத்தும் ரெய்டு.. ’செல்லமே’ திரைப்படத்தில் கிரிஷ் கர்னாட்டின் வீட்டில் விஷால் நடத்திடும் ரெய்டு… என பல ரெய்டு காட்சிகளில் வசூலை வாரி எடுத்தது தமிழ் சினிமா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.