Home /News /entertainment /

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் கமல்ஹாசன்...!

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் கமல்ஹாசன்...!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

கதை வசனம் திரைக்கதை என அனைத்திலும் தன் பெயரை பதித்த கமல்ஹாசன் `ஹே ராம்’, `விருமாண்டி’, `விஸ்வரூபம்’, `விஸ்வரூபம்-II’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஒரு இயக்குனராகவும் வெற்றி பெற்றார்.

  • News18
  • Last Updated :
    தமிழ் சினிமாவில் பல்வேறு அவதாரங்கள் எடுத்துள்ள சகலகலா வல்லவன் கமல்ஹாசன் குறித்த தகவல்கள் ஒரு தொகுப்பு.

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் தன் இளம் வயதில் ஒரு டான்ஸ் மாஸ்டராக திரையுலகில் அறியப்பட்டார். எம்.எஸ்.நடராஜன் மாஸ்டரிடம் `குச்சுப்புடி', தங்கப்பன் மாஸ்டரிடம் `பரதம்', `கதகளி’ என கற்றுத்தேர்ந்த கமல் `நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும் `சவாலே சமாளி’ படத்தில் சிவாஜிக்கும் `அன்புத்தங்கை’ படத்தில் ஜெயலலிதாவுக்கும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார்.

    ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தின் மூலம் நாயக அந்தஸ்து பெற்ற கமல் அதன் பின் ஒரு நடிகராக விஷ்வரூபம் எடுத்தார். சகலகலாவல்லவன், மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன், விருமாண்டி, தசாவதாரம், விக்ரம் என கமல் நாயகனாக நடித்த திரைப்படங்கள் வரலாறு படைத்தன.

    ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் திரை மொழிகள் அனைத்திலும் சகலகலாவல்லவரானார் கமல்ஹாசன். `விக்ரம்’, `மகாநதி’, `ஆளவந்தான்’, `உன்னைப்போல் ஒருவன்’, `தூங்காவனம்’ எனப் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதி திரைக்கதையிலும் மாஸ்டர் ஆனார்.

    கதை வசனம் திரைக்கதை என அனைத்திலும் தன் பெயரை பதித்த கமல்ஹாசன் `ஹே ராம்’, `விருமாண்டி’, `விஸ்வரூபம்’, `விஸ்வரூபம்-II’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஒரு இயக்குனராகவும் வெற்றி பெற்றார்.

    ஒரு திரைக்கலைஞன் சினிமாவின் சகல துறையிலும் கை தேர்ந்து இருக்க வேண்டும் என்பதே இவரின் கோட்பாடாக இருந்தது. அந்த வகையில் `சிகப்பு ரோஜாக்கள்’, `நாயகன்’, `அவ்வை சண்முகி’, `அன்பே சிவம்’, `புதுப்பேட்டை’, `மன்மதன் அம்பு’ எனப் பல்வேறு திரைப்படங்களில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பாடகருமானார்.

    Also read... ’டான்’ முதலில் எனக்கு தான் வந்தது... அந்த காட்சிக்காக படத்தை தவிர்த்தேன்: உதயநிதி ஸ்டாலின்

    தனது 100-வது படமான `ராஜபார்வை ’தொடங்கி, `விக்ரம் 1 &2’, `தேவர் மகன்’, `குருதிப்புனல்’, `ஹே ராம்’, `விருமாண்டி’, `விஸ்வரூபம்-II’ என 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்து தயாரிப்பாளருமானார் கலைஞானி கமல்ஹாசன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Kamal Haasan

    அடுத்த செய்தி