முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் சேதுபதி முதல் நயன்தாரா வரை - ஓடிடியில் வெளியாகும் படங்கள்

விஜய் சேதுபதி முதல் நயன்தாரா வரை - ஓடிடியில் வெளியாகும் படங்கள்

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இவை தவிர மணிரத்னம் தயாரித்துள்ள ஆந்தாலஜி நவரசாவும் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகிறது.

  • Last Updated :

கொரோனா பெருந்தொற்று மாற்றியமைத்த நடைமுறைகளில் ஒன்று ஓடிடி. திரையரங்குகள் மாதக்கணக்கில் பூட்டிக்கிடக்கும் நிலையில், ஓடிடி உள்ளே புகுந்து திரையரங்கு ரசிகர்களை அள்ளிக் கொண்டது.

ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற பெரிய பட்ஜெட் படங்களே நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றன. இதில் ஒரு வசதி. சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகியிருந்தால் அது தமிழகத்தில் மட்டும் பேசப்பட்டிருக்கும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓடிடியில் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியானதால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் படம் சென்றடைந்திருக்கிறது. இந்தியில் விமர்சனங்கள் வெளியிடுகிறார்கள். டூஃபான் படத்தைவிட சார்பட்டா பரம்பரை பல மடங்கு சிறந்த படம் என இந்தி பேசும் ரசிகர்கள் யூடியூபிலும், ட்விட்டரிலும் கொண்டாடுகிறார்கள்அடுத்தடுத்து பல தமிழ்ப் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளன.

திட்டம் இரண்டு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் மர்டர் மிஸ்ட்ரி திரைப்படம் திட்டம் இரண்டு. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த மாதம் 30 ஆம் தேதி திட்டம் இரண்டு தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நேரடியாக சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

நரகாசூரன்

கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் நரகாசூரன் பல வருடங்களாக வெளியாகமல் உள்ளது. அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா நடித்திருக்கும் இப்படத்தை சோனிலிவ் ஓடிடி தளம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிடுகிறது.

நெற்றிக்கண்

நயன்தாரா நடித்துள்ள கொரிய பிளைன்ட் திரைப்படத்தின் தழுவலான நெற்றிக்கண் படத்தை மிலந்த் ராவ் இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிப்பு. திரையரங்கு திறப்பது தள்ளிப்போவதால் நெற்றிக்கண் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோ பெரும் தொகைக்கு இப்படத்தை வாங்கியுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.

கடைசி விவசாயி

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்திருக்கும் படம் கடைசி விவசாயி. விவசாயிகளின் பிரச்சனையை சொல்லும் இந்தப் படத்தை சோனிலிவ் வாங்கியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.

பூமிகா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஹாரர் படம் பூமிகா. இந்தப் படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. அதேநாள் படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். கடைசிக்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் முறைப்படி அறிவிப்பு வெளியாகும். இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படம்

துக்ளக் தர்பார்

விஜய் சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடித்துள்ள துக்ளக் தர்பார் விநாயகசதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதேதநாளில் படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாகும்.

நேரடி ஓடிடி/தொலைக்காட்சி வெளியீட்டை உறுதி செய்திருக்கும் திரைப்படங்கள் இவை. இவை தவிர மணிரத்னம் தயாரித்துள்ள ஆந்தாலஜி நவரசாவும் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகிறது. மேலும் பல படங்களும் நேரடி ஓடிடி வெளியீட்டிற்காக பேச்சுவார்த்தையில் உள்ளன.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: OTT Release