ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. வரிசைக் கட்டும் படங்கள்.. தீபாவளிக்கு ரிலீசாகும் மூவி லிஸ்ட்!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. வரிசைக் கட்டும் படங்கள்.. தீபாவளிக்கு ரிலீசாகும் மூவி லிஸ்ட்!

தீபாவளி படங்கள்

தீபாவளி படங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தீபாவளிக்கு ரிலீசாகும் படங்கள் ஒரு தொகுப்பு.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகிறது. இந்தப் படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஸ்பை த்ரில்லர் ஆக்ஷன் ஜேனரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2  கேரக்டரில் கார்த்தி இடம்பெற்றுள்ளார். ஜிவி பிரகாஷ் சர்தார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  டான் திரைப்படத்தை தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது.

  ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓரி தேவுடா. இது தமிழில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீ மேக் ஆகும். இந்தப் படத்தில் நாயகனாக விஷ்வக் சென் நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

  நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் சூர்யா இயக்கியுள்ள தெலுங்கு படம் ஜின்னா. சன்னி லியோன் மற்றும் பாயல் ராஜ்புத் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஏவிஏ என்டர்டெயின்மென்ட், 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரியுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

  இயக்குனர் அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது. சத்யா தேவ், நாசர் என பலர் நடித்திருக்கும் இது திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தினை அருணா பாட்டியா விக்ரம் மல்ஹோத்ரா தயாரித்துள்ளனர். இந்தப் படம் வரும் அக்டேபர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்திப் படம் ‘தேங்க் காட்’. இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் உடன் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் அக்டோபர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படம் கந்தாட குடி. கந்தாட குடி என்பது அமோகவர்ஷா இயக்கத்தில் உருவான ஆவணப்படம் ஆகும். இந்த ஆவணப்படம் கர்நாடகாவின் இயற்கை வளங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இந்தப் படம் புனீத் ராஜ்குமாரின் நினைவு நாளிற்கு முன்னதாக அக்டோபர் 28-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Deepavali, Diwali, Diwali release, Entertainment