Home /News /entertainment /

பின்னணி இசையின் முன்னணி நாயகன் யுவன் சங்கர் ராஜா!

பின்னணி இசையின் முன்னணி நாயகன் யுவன் சங்கர் ராஜா!

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

’7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் காட்சியின் வழியே செல்வ ராகவன் ஒருபக்கம் உயிரை உருக வைக்க, மறுபக்கம் யுவனின் பின்னணி இசை உணர்வுகளை கடத்தியது.

  • News18
  • Last Updated :
    தமிழ் சினிமாவில் பின்னணி இசையில் முன்னிலையில் இருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை குறித்த ஒரு தொகுப்பு.

    பின்னணி இசையில் தனி ராஜாங்கம் நடத்தி கொண்டிருந்த இளையராஜாவுக்கு பின் அந்த ராஜாங்கத்தின் செல்லப்பில்ளை ஆனார் யுவன் ஷங்கர் ராஜா. தீம் மியூசிக்கில் யுவன் சங்கர் ராஜாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக அமைந்தது ‘பில்லா’. இத்திரைப்படத்தில் நடிகர் அஜீத் நடந்து வரும்போது ஒலிக்கும், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையில் தெறித்தது திரையரங்கம்.

    தற்காலத்தில் தமிழ் திரையுலகில் பின்னணி இசையில் யுவனை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதை தன் அடுத்தடுத்த திரைப்படங்களில் சொல்லி வருகிறார். குறிப்பாக யுவன் - அஜித் கூட்டணியில் உருவான ’மங்காத்தா’ திரைப்படத்தின் தீம் மியூசிக் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருவதை பார்க்கலாம்.

    ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் காட்சியின் வழியே செல்வ ராகவன் ஒருபக்கம் உயிரை உருக வைக்க, மறுபக்கம் யுவனின் பின்னணி இசை உணர்வுகளை கடத்தியது. குறிப்பாக ’நினைத்து நினைத்து பார்த்தால்’ பாடலின் பின்னணி இசையோடு வழிந்தது காதலின் கண்ணீர்.

    Also read... இணையத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள்!

    பின்னணி இசை கேட்போர் மனதிற்குள், ஏதோ மாயாஜாலம் செய்யும் வித்தைகாரன் யுவன் என்று சொல்ல வைத்தது புதுப்பேட்டை… பருத்திவீரன்….,ஆரண்ய காண்டம். காட்சிகள் கவர தவறும் தருணத்தில் இவரின் பின்னணி இசையே கதையை மொழி பெயர்த்தது. குறிப்பாக "கற்றது தமிழ்" படத்தின் பின்னணி இசை, ஒவ்வொரு பார்வையாளனையும் ஏதோ ஒரு ரயில் பயணத்தில் ’உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்’ என பயணிக்க வைத்தது.

    தமிழ் சினிமாவில் அம்மாவிற்கு "ஆராரிராரோ"….. அப்பாவிற்கு " தெய்வங்கள் எல்லாம்",….. மகளுக்கு "ஆனந்த யாழை",…. காதலின் பிரிவுக்கு " ஒரு கல்..ஒரு கண்ணாடி "…., காதலின் துரோகத்துக்கு " என் நண்பனே", என அனைத்து விதமான பாடல்களையும் கொடுத்து அவற்றின் பின்னணி இசையில் இசை ரசிகர்களை ஆட்கொண்ட யுவன் ஷங்கர் ராஜா என்றுமே பின்னணியில் முன்னணியே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Yuvan Shankar raja

    அடுத்த செய்தி