Home /News /entertainment /

அதர்வாவின் குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு...!

அதர்வாவின் குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு...!

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

இதுதொடர்பாக ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை படத்தின் வினியோக உரிமையை, ராக் ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4.85 கோடி வாங்கியதாக கூறியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை படத்தின் வினியோக உரிமையை, ராக் ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4.85 கோடி வாங்கியதாக கூறியுள்ளது.

இதில், 2 .85 கோடி ரூபாய் வழங்கிய ராக்ஃபோர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை என்றும், அதற்கு பதிலாக வினியோக உரிமையை திருப்பி தருவதாகவும், படத்தில் லாபத்தில் 40 சதவீதத்தை தரும்படியும், நஷ்டம் ஏற்பாட்டால் மீதமுள்ள தொகையை திரும்பி தருவதாகவும் ஒப்பந்தம் செய்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... மதுரையில் சிசுக்கொலைகளை தடுக்க சிறப்புக்குழு அமைப்பு!

படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டிய நிலையில், ராக் ஃபோர்ட் தயாரிப்பில் அதர்வா நடிப்பில் ஸ்ரீ கனேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் என்ற படத்தை வெளியிட உள்ளதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வந்ததாகவும், அதனால் தங்களுக்கு தர வேண்டிய ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 24 சதவீத வட்டியுடன் ஒரு கோடியே 94 லட்சம் ரூபாயை வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Also read... ஜல்லிக்கட்டு - ஜனவரியில் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ்!

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராக் ஃபோர்ட் நிறுவனம் சார்பில் படத்தை தற்போது வெளியிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Atharvaa

அடுத்த செய்தி