Home /News /entertainment /

கே.ஜி.எஃப். தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட அறிவிப்பு… மேட்டர் என்னவாக இருக்கும்?

கே.ஜி.எஃப். தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட அறிவிப்பு… மேட்டர் என்னவாக இருக்கும்?

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

கேஜிஎஃப் 2 தற்போது 900 கோடி ரூபாயைத் தாண்டி ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி ராஜநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஹோம்பலே ஃபிலிம்ஸ்… இந்த தயாரிப்பு நிறுவனத்தை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு ஹோம்பலே சர்வதேச அளவில் ரீச் ஆகியுள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்த கே.ஜி.எஃப். முதல் மற்றும் 2ம் பாகங்கள் பல்வேறு ரிக்கார்டுகளை முறியடித்துள்ளன. இதுதொடர்பாக ஒரு புத்தகமே வெளியிடும் அளவுக்கு சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கேஜிஎஃப் 2 தற்போது 900 கோடி ரூபாயைத் தாண்டி ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி ராஜநடை போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஹோம்பலே பேனரில், பாகுபலி பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க - கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீடு

இந்தப் படத்தை முடித்துக் கொண்டு தெலுங்கு நட்சத்திரம் ஜூனியர் என்டிஆருக்கு ஒரு படத்தை பண்ணுகிறார் பிரசாந்த் நீல். இதன் பின்னர் கேஜிஎஃப் 3 குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நாளைக்கு ஒரு பிரமாண்ட அறிவிப்பை வெளியிடப் போவதாக ஹோம்பலே நிறுவனம் ட்வீட் செய்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். சமீபத்தில் ஹோம்பலே தயாரிப்பில் சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க - அனைத்திந்திய சினிமா என்ற ஒன்று இல்லை: ஏன் இந்தி சினிமா ரீமேக் செய்யப்படுவதில்லையா?- அபிஷேக் பச்சன் பாய்ச்சல்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த படத்தில் சூர்யாதான் ஹீரோ என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுகுறித்த அப்டேட் வெளியாகுமா அல்லது பிரபாஸின் சலார் படத்துடைய டீசர், ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். நாளை காலை 9.50 வரை காத்திருப்போம்.
Published by:Musthak
First published:

Tags: KGF 2

அடுத்த செய்தி