ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை த்ரிஷாவை முத்தமிட்டு கொஞ்சும் குழந்தை.! க்யூட் வைரல் வீடியோ

நடிகை த்ரிஷாவை முத்தமிட்டு கொஞ்சும் குழந்தை.! க்யூட் வைரல் வீடியோ

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

Actress Trisha : நடிகை த்ரிஷாவின் படத்தை ஒரு குட்டி குழந்தை கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை த்ரிஷா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அஜித், விஜய், கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.த்ரிஷாவின் தனலட்சுமி, ஜெஸி, ஜானு ஆகிய கதாபாத்திரங்கள் ரசிகர்களால் இன்று வரை மறக்கமுடியாத கதாபாத்திரமாக உள்ளது.ஆண்களின் மனதில் இளவரசியாக வாழ்ந்து வந்த த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசி கதாபாத்திரத்திலேயே நடித்தார்.பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகத்திலும் த்ரிஷாவை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது த்ரிஷா ராம் என்ற மலையாள் படத்திலும், தமிழில்  ’தி ரோட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். த்ரிஷா திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

  இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் விளம்பர பலகை ஒன்றை பார்த்த குழந்தை த்ரிஷா மீது முத்த மழையை பொழியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by Trish (@trishakrishnan)  இந்த வீடியோவில் ‘ த்ரிஷாவின் முகத்தை தொட்டு பார்க்கும் குழந்தை, தனது அம்மாவிடம் முத்தமிட வேண்டும் என்று செய்கையிலே கூற, அம்மாவும் குழந்தையை த்ரிஷாவின் படம் அருகே கொண்டு செல்ல, அந்த குழந்தை த்ரிஷாவிற்கு விடாமல் முத்தம் கொடுக்கிறது. இந்த வீடியோவை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actress Trisha, Viral Video