ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெண் குழந்தைக்கு தாயான ஆலியா பட்.. ரன்பீர் -ஆலியா ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள்!

பெண் குழந்தைக்கு தாயான ஆலியா பட்.. ரன்பீர் -ஆலியா ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள்!

மனைவி ஆலியா பட் உடன் நடிகர் ரன்பீர் கபூர். (படம்: இன்ஸ்டாகிராம்)

மனைவி ஆலியா பட் உடன் நடிகர் ரன்பீர் கபூர். (படம்: இன்ஸ்டாகிராம்)

பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் - ஆலியா இருவரும் ஏப்ரல் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாலிவுட்டின் சூப்பர் ஜோடியான ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.  மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடலில் காலை 7 மணிக்கு ஆலியா அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12.5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிக்கு சோஷியல் மீடியாவில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)  முன்னதாக  பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் - ஆலியா இருவரும் ஏப்ரல் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த  இவர்கள் திடீரென்று திருமண செய்தியை அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

  இதையும் வாசிக்க: த்ரிஷாவுக்கு என்னாச்சு... அவர் பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் சோகம்..!

  தங்களுக்கு மிகவும் பிடித்தமான வீட்டின் பால்கனியில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது.  ஜீன் மாதம் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம் என கூறி அடுத்த இன்ப அதிர்ச்சியை தந்தனர். இந்நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Alia Bhatt, Ranbir Kapoor