பிக்பாஸ் சென்ராயனுக்கு ஆண் குழந்தை..! வாழ்த்திய பிரபல இயக்குநர்

பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் சென்ராயன் மூடர் கூடம் படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

பிக்பாஸ் சென்ராயனுக்கு ஆண் குழந்தை..! வாழ்த்திய பிரபல இயக்குநர்
சென்ராயன் -கயல்விழி தம்பதி
  • News18
  • Last Updated: February 10, 2019, 12:43 PM IST
  • Share this:
நடிகர் சென்ராயன் கயல்விழி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் சென்ராயன் மூடர் கூடம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவரும் அறியும் நபராக மாறினார்.

சென்ராயன் கடந்த 2014-ம் ஆண்டு கயல்விழியை திருமணம் செய்து கொண்டதும், அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே தெரிய வந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பேசிய சென்ராயன், தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க இருப்பதாகவும் கூறினார். ஆனால் அவர் அப்படிச் சொல்லிய ஒருசில நாட்களிலேயே கயல்விழி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலேயே சென்ராயன் - கயல்விழி தம்பதிக்கு குடும்பத்தாரின் உதவியுடன் வளைகாப்பு உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டன.


நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நடிகை சினேகாவை நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற தனது மனைவியின் ஆசையையும் சென்ராயன் நிறைவேற்றி வைத்தார்.4 வருடங்களுக்கு பிறகு தான் அப்பாவாகிவிட்டேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்த சென்ராயனுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்” என்று கூறப்பட்டுள்ளது.


வடிவேலுவின் பேட்ட - வீடியோ

First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்