96 ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... யார் அந்த ஜோடி?

தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகிறார்.

news18
Updated: January 26, 2019, 4:27 PM IST
96 ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... யார் அந்த ஜோடி?
த்ரிஷா, விஜய் சேதுபதி
news18
Updated: January 26, 2019, 4:27 PM IST
தமிழில் வெளியான ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் '96'. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவியாக த்ரிஷாவும் நடித்திருந்தனர். இவர்களது கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். அதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகிறார். 96 படத்திற்காக முதல்முறையாக ஷர்வானந்த், சமந்தா ஜோடி சேருகிறார்கள்.தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பள்ளிப் பருவ காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த நிலையில் தெலுங்கில் கல்லூரி காதலை பேசுகிறது 96 படம். ஷர்வானந்த் - சமந்தா ஜோடியே கல்லூரி கால கதையிலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அவர்களது 34-வது படம். படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

Also watch

First published: January 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...