விஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை!

news18
Updated: April 24, 2019, 8:06 PM IST
விஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை!
விஜய்
news18
Updated: April 24, 2019, 8:06 PM IST
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் படத்தில் மீண்டும் ஒரு இளம் நடிகை தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அட்லீ அடுத்ததாக விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது.

தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக மேயாதமான் பட நாயகி இந்துஜா நடிக்கிறார்.

சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 29- ம் தேதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின்னர் டெல்லி செல்லவுள்ளது. டெல்லியில் மே 3-ம் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் தற்போது 96 படத்தில் புகைப்பட மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இந்தப் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

படிக்க: ‘விஜய் 63’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் எலக்ட்ரீஷியன் காயம்... நேரில் சென்று நலம் விசாரித்த விஜய்..!

வீடியோ பார்க்க: தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...