Navarasa: சூர்யாவுக்கு காதல், விஜய் சேதுபதிக்கு கருணை - கலக்கும் நவரசா!

சூர்யா - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியுடன் பிரகாஷ் ராஜ், ரேவதி என சீனியர்களும் நடிக்கின்றனர்.

  • Share this:
மணிரத்னமும், ஜெயேந்திரா பஞ்சாபகேசனும் இணைந்து தயாரித்திருக்கும் ஆந்தாலஜி நவரசா. நெட்பிளிக்ஸுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது.

நவரசங்கள் என்பது மனிதனின் ஒன்பது உணர்வுகளை குறிப்பது. காதல், கருணை, வீரம்... என ஒன்பது உணர்வுகள். இந்த உணர்வுகளை அடிப்படையாக வைத்து ஒன்பது குறும்படங்களை ஒன்பது பேர் இயக்கியுள்ளனர். அதன் தொகுப்பே நவரசா. இயக்கியது, நடித்தது, இசையமைத்தது என அனைவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்கள். சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த ஒன்பது உணர்வுகளில் எதை யார் இயக்கியிருக்கிறார்கள்? யார் நடித்திருக்கிறார்கள்?

1. கிதார் கம்பி மேலே நின்று (காதல்)

Navarasa Anthology

இயக்கம் - கௌதம் வாசுதேவ மேனன்
நடிப்பு - சூர்யா, ப்ரயாகா ஜோஸ் மார்டின்

கௌதம் நடிப்பில் சூர்யா, ப்ரயாகா ஜோஸ் மார்டின் நடித்திருக்கும் கிதார் கம்பி மேலே நின்று காதல் ரசத்தை சொல்லும் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் இயக்கத்தில் சூர்யா. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்று மறக்க முடியாத படங்களை தந்த கூட்டணி துருவநட்சத்திரத்தில் உடைந்தது. முழுசா கதை பண்ணிட்டு வாங்க, கால்ஷீட் தர்றேன் என்று சூர்யா சொல்ல, கால்வாசி கதையோட ஷுட்டிங் போனதுதானே காக்க காக்கவும், வாரணம் ஆயிரமும் என்று கௌதம் அடம்பிடிக்க, கூட்டணி டமாலானது. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் இணைந்திருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் செம எதிர்பார்ப்பு. அதற்கேற்ப மீசையில்லாத சூர்யாவின் டீன்ஏஜ் பையன் தோற்றம் இன்ஸ்டன்ட் ஹிட்டாகியுள்ளது.

2. ரௌத்திரம் (கோபம்)

Navarasa Anthology

இயக்கம் - அரவிந்த்சாமி
நடிப்பு - ரித்விகா, ஸ்ரீராம்

ரௌத்திரம் என்ற இந்தப் படத்தின் பெயரே, இது எந்த உணர்வை சொல்ல வருகிறது என்பதை சொல்லி விடுகிறது. மணிரத்னத்தின் ரோஜாவில் அவரால் நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி அதே மணிரத்னத்தின் தயாரிப்பில் இயக்குனராகியிருக்கிறார். கொஞ்சகாலம் அரவிந்த்சாமி சினிமாவிலிருந்து விலகியிருந்த போது, தனது கடல் படத்தின் மூலம் அரவிந்த்சாமியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்தவரும் மணிரத்னமே. மணிரத்னம் என்ற ஒரேயொரு நபரின் அன்புக்குரியவரானால் ஒருவருக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்பதற்கு அரவிந்த்சாமி சான்று. பரதேசியில் அறிமுகமாகி, மெட்ராஸில் கவனம் ஈர்த்த ரித்விகா இதில் முதன்மை கதாபாத்திரத்தில் வருகிறார். எல்லோரும் முன்னணி நடிகர்களை நோக்கி பாய்கையில் அரவிந்த்சாமி ரித்விகா போன்ற ஒரு நடிகையின் பக்கம் திரும்பியது வரவேற்கத்தக்கது. ஸ்ரீராம், ராணி திலக் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

3. சம்மர் ஆஃப் 92 (நகைச்சுவை)

Navarasa Anthology

இயக்கம் - ப்ரியதர்ஷன்
நடிப்பு - யோகி பாபு, ரம்யா நம்பீசன்

நகைச்சுவை உணர்வுக்கு மணிரத்னம் சரியான ஆளை தேர்வு செய்துள்ளார். மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷன். தமிழுக்கும் அறிமுகமானவர். நகைச்சுவை படங்கள் இயக்குவதில் மாஸ்டர். யோகி பாபு, ரம்யா நம்பீசனை வைத்து படத்தை எடுத்துள்ளார். படத்தின் பெயர் சம்மர் ஆஃப்; 92. ப்ரியதர்ஷன் இயக்கத்தில் விரைவில் ஹங்கம்மா 2 இந்தித் திரைப்படம் வெளியாகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த பழைய படமொன்றின் ரீமேக் இது. சம்மர் ஆஃப் 92 வும் அப்படியொரு ரீமேக்காக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு படத்தில் ஏதாவது ஒரு காமெடி ட்ராக்கை எடுத்துக் கொண்டால் போதுமே. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், நெடுமுடி வேணு. இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். இந்தியனுக்குப் பிறகு ராஜீவ்மேனனின் சர்வம் தாளமயத்தில் நல்ல வேடம் செய்திருந்தார். இதில் அது தொடரும் என நம்புவோம்.

4. ப்ராஜெக்ட் அக்னி (ஆச்சரியம்)

Navarasa Anthology

இயக்கம் - கார்த்திக் நரேன்
நடிப்பு - அரவிந்த்சாமி, பிரசன்னா

கார்த்திக் நரேன் ப்ராஜெக்ட் அக்னி என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ஆச்சரிய உணர்வை சொல்லும் படம். கார்த்திக் நரேனின் இரண்டாவது படம் நரகாசூரனின் நாயகன் அரவிந்த்சாமியும், பிரசன்னாவும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பூர்ணா. கார்த்திக் நரேன் இயக்கத்தில் இதுவரை இரணடு படங்கள் வெளிவந்துள்ளன. இளைஞர்கள் மத்தியில் மனிதருக்கு நல்ல செல்வாக்கு. நல்ல படத்தைத் தவிர வேறு எதையும் இயக்க மாட்டார் என்று கண்ணை மூடி நம்புகிறார்கள். பல வருடங்கள் பெட்டிக்குள் இருந்த நரகாசூரன் விரைவில் சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தனுஷை வைத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடக்கிறது. அத்துடன் நவரசாவும் வெளியாகிறது. கார்த்திக் நரேனுக்கு இது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.பொற்காலம்.

5. பாயாசம் (வெறுப்பு)

Navarasa Anthology

இயக்கம் வஸந்த் சாய்
நடிப்பு - டெல்லி கணேஷ், ரோகிணி,

வஸந்த் சாய் என்ற பெயரைப் பார்த்து யாரோ புது இயக்குனர் என குழம்ப வேண்டாம். கேளடி கண்மணி, ஆசை படங்களை இயக்கிய வஸந்த் தனது பெயரில் ஒரு சாய்யை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவரது முதல் படம் கேளடி கண்மணியில் வயதான தம்பதிகளின் உலகு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை இங்கு ஞாபகப்படுத்த காரணம், இந்த பாயாசம் கதையும் வயதான டெல்லி கணேஷ், ரோகிணியை சுற்றி நடக்கிறது. இளம் ரத்தமாக அதிதி பாலனும் உண்டு. பாயாசம் என்று இனிப்பான பெயரில் வெறுப்பான விஷயத்தை சொல்கிறார் என்பதே எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

6. பீஸ் (அமைதி)

Navarasa Anthology

இயக்கம் - கார்த்திக் சுப்பாராஜ்
நடிப்பு பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ மேனன்

பீஸ் என்றதும் குழம்ப வேண்டாம். இது அமைதியை குறிக்கும் பீஸ். பாபி சிம்ஹா கழுத்தில் சயனைடு குப்பியுடன் இருப்பதைப் பார்த்தால் இலங்கைப் போராளியைப் பற்றிய கதை என்று தெரிகிறது. ஜகமே தந்திரத்துக்காக எழுதியதில் மீந்ததை வைத்து இந்த பீஸை அவர் எடுத்திருப்பாரோ என்ற ஐயம் எழாமலில்லை. கார்த்திக் சுப்பாராஜின் கம்பெனி நடிகர் பாபி சிம்ஹாவுடன் கௌதம் வாசுதேவ மேனனும் நடித்துள்ளார். இந்த ஆந்தாலஜியில் இயக்கம், நடிப்பு என இரு துறைகளில் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்கள் கௌதமும், அரவிந்த்சாமியும். ஜகமே தந்திரம் ஏற்படுத்திய அலர்ஜியும், பீஸ் படத்தின் பாபி சிம்ஹாவின் போராளித் தோற்றமும் யாரையும் அமைதியிழக்கச் செய்யும்.

7. எதிரி (கருணை)

Navarasa Anthology

இயக்கம் - பிஜோய் நம்பியார்
நடிப்பு - விஜய் சேதுபதி, அசோக் செல்வன்

இன்னொரு மலையாள இயக்குனர், பிஜோய் நம்பியார். இவர் துல்கர் சல்மானை வைத்து இயக்கிய சோலோ திரைப்படமும் ஒரு ஆந்தாலஜி தான். இதில் இவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயர் எதிரி. சொல்லவரும் உணர்வு கருணை. எதிரிக்கு கருணை காட்டுதல். அட, படத்தின் கதையை இப்படியா அப்பட்டமாக வைப்பது? விஜய் சேதுபதியுடன் பிரகாஷ் ராஜ், ரேவதி என சீனியர்களும் நடிக்கின்றனர். பிஜோய் நம்பியாரின் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ரசிக்க முடியும். அந்தவகையில் எதிரி நம்பிக்கைக்குரியவன்.

8. துணிந்த பின் (வீரம்)

Navarasa Anthology

இயக்கம் - சர்ஜுன்
நடிப்பு - அதர்வா, அஞ்சலி

துணிந்த பின் என்ற குறும்படத்தை சர்ஜுன் இயக்கியிருக்கிறார். நடிப்பு அதர்வா. வீரத்தைப் பேசுகிற படம் இது. ராணுவ அதிகாரியாக இதில் அதர்வா வருகிறார். அப்படியானால் வீரம் பொருத்தமான பெயர்தானே. உடன் நடித்திருப்பது அஞ்சலி. இவர்களுடன் கிஷோரும் நடித்துள்ளார். சில்லுக்கருப்படியை இயக்கிய ஹலிதா ஷமீம் இந்த ஆந்தாலஜியில் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு சர்ஜுன் இயக்கியிருக்கிறார்.

9. இன்மை (பயம்)

Navarasa Anthology

இயக்குனர் - ரதீந்திரன் பிரசாத்
நடிப்பு சித்தார்த், பார்வதி

இன்மை பய உணர்வை சொல்லும் படம். ரவீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். சித்தார்த், பார்வதி என முதன்மை நடிகர்கள் இருவருமே திறமையானவர்கள். பயம் என்றதும் பேய் படமோ என அச்சப்பட வேண்டியதில்லை;. மணிரத்னம் அந்தளவுக்கு கீழிறங்கி சோதிக்க மாட்டார். இது மனிதர்களின் வாழ்வியல் பயத்தை சொல்லும் படமாம்.

இந்த ஒன்பது படத்தின் கதைகளில் எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமித்ரன் ஆகியோர் பங்களிப்பு செலுத்தியுள்ளனர்.

தமிழில் வெளியான ஆந்தாலஜியில் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் மட்டும் இரண்டு கதைகள் தேறின. மற்றபடி எந்த ஆந்தாலஜியும் கவரவில்லை. நவரசா தமிழ் ஆந்தாலஜியின் தலையெழுத்தை மாற்றி எழுதும் என நம்புவோம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: