இளையராஜா இசையில் முதல் பாடல்: கல்லூரி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மூலம் தங்கள் கனவு நினைவானதில் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

news18
Updated: January 12, 2019, 7:41 PM IST
இளையராஜா இசையில் முதல் பாடல்: கல்லூரி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!
கல்லூரி மாணவிகளுடன் இளையராஜா
news18
Updated: January 12, 2019, 7:41 PM IST
கல்லூரி மாணவிகள் 9 பேரை, தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

சமீபத்தில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டார்.  அப்போது, தனது 75-வது பிறந்த நாள் விழாவை மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாணவிகள் மத்தியில் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து அந்த 2 கல்லூரிகளிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்து குரல் சோதனை வைத்த இளையராஜா, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்துள்ளார்.

தேர்வான ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாக உள்ளனர். திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் ஏன் சுடப்பட்டார்? - வீடியோ

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...