ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

80's Actors Reunited: கொரோனாவுக்கு பின் ஒன்று கூடி மகிழ்ந்த 80’ஸ் நடிகர்-நடிகைகள்!

80's Actors Reunited: கொரோனாவுக்கு பின் ஒன்று கூடி மகிழ்ந்த 80’ஸ் நடிகர்-நடிகைகள்!

80ஸ் நடிகர்கள் சந்திப்பு

80ஸ் நடிகர்கள் சந்திப்பு

இந்த சந்திப்பில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா, லிசி, சுஹாசினி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

80-களில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

கடந்த 80 மற்றும் 90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக திகழ்ந்தவர்கள் வருடத்தில் ஒருமுறை சந்திப்பை நடத்துவார்கள். கடந்த வருடம் கொரோனாவால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதற்கு முன்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் கலந்துக் கொண்டு தங்கள் சக நண்பர்களுடன் அன்பை பகிர்ந்துக் கொள்வார்கள்.

80’s actors reunited, 80s actress meeting, 80s actors get together, radhika sarathkumar, khushbu sundar, poornima bhagyaraj, radha, ambika, lisy priyadharshan, rahman, tamil actress, 80s tamil actress, tamil cinema, tamil cinema news, latest tamil news, 80ஸ் நடிகர்களின் சந்திப்பு, 80ஸ் நடிகைகள் சந்திப்பு, 80ஸ் தோழிகள் சந்திப்பு, ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பூ சுந்தர், ராதா, அம்பிகா, ரஹ்மான், தமிழ் சினிமா, தமிழ் சினிமா செய்திகள், லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள்
80ஸ் நடிகர்கள்

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா, லிசி, சுஹாசினி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கள் அன்பு மற்றும் மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டு, விருந்தும் சாப்பிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

80’s actors reunited, 80s actress meeting, 80s actors get together, radhika sarathkumar, khushbu sundar, poornima bhagyaraj, radha, ambika, lisy priyadharshan, rahman, tamil actress, 80s tamil actress, tamil cinema, tamil cinema news, latest tamil news, 80ஸ் நடிகர்களின் சந்திப்பு, 80ஸ் நடிகைகள் சந்திப்பு, 80ஸ் தோழிகள் சந்திப்பு, ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பூ சுந்தர், ராதா, அம்பிகா, ரஹ்மான், தமிழ் சினிமா, தமிழ் சினிமா செய்திகள், லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள்
80ஸ் தோழிகள்

அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் நடிகை ராதிகா சரத்குமார், ”1980-களில் கதாநாயகிகளாக நடித்த நாங்கள் எல்லோரும் இப்போதும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். கொரோனாவால் நீண்ட நாட்களாக எங்களால் சந்திக்க முடியவில்லை. போனில் பேசி வந்தோம். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்து உள்ளதால் வார இறுதி நாளில் அனைவரும் நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Khushbu sundar, Radhika sarathkumar