Home /News /entertainment /

நெஞ்சுக்கு நீதி பட நடிகையை மணந்த 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்!

நெஞ்சுக்கு நீதி பட நடிகையை மணந்த 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்!

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் திருமணம்

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் திருமணம்

இயக்குனர் மிஷ்கினின் தீவிர ரசிகரான ஸ்ரீ கணேஷ், அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான சுகாசினியை மணந்துள்ளார்.

    8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது காதலி சுஹாசினியை புதன்கிழமை திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    சுஹாசினியும் சினிமா துறையில் இருப்பவர் தான். தியேட்டர் ஆர்டிஸ்ட், மாடல், நடிகை என பல முகங்களைக் கொண்டிருக்கிறார். அதோடு விஜய்சேதுபதியின் சீதக்காதி, உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்துள்ளார். இருவரும் சில வருடங்களாக காதலில் இருந்துள்ளனர்.

    இயக்குனர் மிஷ்கினின் தீவிர ரசிகரான ஸ்ரீ கணேஷ், அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். ஜப்பானிய திரைப்படமான ஸ்ட்ரே டாக் மூலம் ஈர்க்கப்பட்ட 8 தோட்டாக்கள் திரைப்படத்தை முதலில் இயக்கினார்.

    குழந்தை கட்டாயம் வேணும்... திருமணத்திற்கு முன்பு ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவரது அடுத்த திரைப்படமான குருதி ஆட்டம் பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி, வத்சன் சக்ரவர்த்தி, கண்ணா ரவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி