முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / National Film Awards 2022: தேசிய விருது யாருக்கு? நெட்டிசன்கள் கணிப்பு!

National Film Awards 2022: தேசிய விருது யாருக்கு? நெட்டிசன்கள் கணிப்பு!

சூரரைப்போற்று

சூரரைப்போற்று

ஆஸ்கர் போட்டி வரை சென்ற சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருது நிச்சயம் எனவும், அப்படி கிடைத்தால் அது சூர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :

National Film Awards winners: 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து தமிழில் யார் / எந்தப் படம் தேசிய விருதைப் பெறும் என நெட்டிசன்கள் இணையத்தில் கணித்து வருகிறார்கள்.

2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று ஜூலை 22 மாலை 4 மணிக்கு, பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான இது சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

2020-ல் ஏற்பட்ட கொரோனா தொற்றால், சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின. அந்த வருடம் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால், பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின.

இந்நிலையில் இன்று வெளியாகும் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், எந்தெந்த படங்கள் தேசிய விருதுகளைப் பெறும் என இணையத்தில் நெட்டிசன்கள் கணித்து வருகிறார்கள். அதில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என பதிவிட்டு வருகிறார்கள். ஆஸ்கர் போட்டி வரை சென்ற சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருது நிச்சயம் எனவும், அப்படி கிடைத்தால் அது சூர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

Vikram: திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த கமல் ஹாசனின் விக்ரம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வரும் நிலையில், அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

முடிவுக்கு வரும்முன் இந்த படங்களைப் பாருங்கள், விருது நிச்சயம் என இந்த பயனர் பதிவிட்டிருக்கிறார்.

தனுஷின் கர்ணன் திரைப்படம் தேசிய விருதைப் பெறும் என நம்புவதாக இந்த பயனர் தெரிவித்துள்ளார்.

மாலிக், ட்ரான்ஸ் ஆகியப் படங்களுக்காக ஃபகத் பாசிலுக்கும், சூரரைப்போற்று படத்துக்காக சூர்யாவுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்பது இவரின் நம்பிக்கை.

சூரரைப்போற்று படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என்கிறார்.

சூரரைப்போற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது இவரின் எண்ணம்.

First published:

Tags: National Film Awards