• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஸ்வாசம் திரைப்படத்துக்காக தேசிய விருது... இமான் நெகிழ்ச்சி பேட்டி

விஸ்வாசம் திரைப்படத்துக்காக தேசிய விருது... இமான் நெகிழ்ச்சி பேட்டி

டி.இமான்

டி.இமான்

விஸ்வாசம் திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இயக்குநர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நயன்தாரா, ஜெகபதி பாபு, அனிகா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

கண்ணான கண்ணே உள்ளிட்ட விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் யூடியூபில் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்றிருக்கும் நிலையில் இத்திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் டி.இமான் முதல்முறையாக தேசிய விருது பெற்றுள்ளார். 67-வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டி.இமான், “இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதற்காக நாங்கள் எதுவும் மெனக்கெடவில்லை. எந்த விருதும் கலைஞனுக்கு ஒரு ஊக்கம் தான்.” என்றார்.

67-வது தேசிய விருது விழாவில் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டிக்கு விருது என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. அதேபோல் அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: