Home /News /entertainment /

அரசின் புதிய கட்டண அறிவிப்பால் 50 திரையரங்குகள் மூடல்..

அரசின் புதிய கட்டண அறிவிப்பால் 50 திரையரங்குகள் மூடல்..

காட்சி படம்

காட்சி படம்

50 Theatres Closed In Andhra : ஆந்திராவில் நடப்பது சரியாக இல்லை. நம் அனைவருக்கும் இது தெரியும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஆந்திர அரசின் புதிய அறிவிப்பால் மேற்கு கோதாவரி பகுதியில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அங்குள்ள திரையரங்குகள் குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது. இதற்கு சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஷியாம் சிங்கா ராய் படத்தின் புரமோஷனுக்கு வந்த நானி இது குறித்து கேட்டதற்கு, "ஆந்திராவில் நடப்பது சரியாக இல்லை. நம் அனைவருக்கும் இது தெரியும். நீங்கள் (அரசியல்வாதிகள்) பார்வையாளர்களை அவமானப்படுத்துகிறீர்கள். 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என டிக்கெட் கட்டணம் இருப்பதை பார்க்கிறேன்" என்றார்.

நானி எந்தப் பிரச்சனையையும் பேச தயங்காதவர். அவர் மேலும் கூறுகையில், "ஒரு மளிகைக்கடையைவிட பத்து பேருக்கு வேலை கொடுக்கும் தியேட்டர் பெரியது. ஆனால், மளிகைக்கடைக்கு வரும் வருமானம் திரையரங்குகளுக்கு இல்லை. நினைத்துப் பாருங்கள். பள்ளியில் எல்லா மாணவர்களும் பிக்னிக்கிற்கு 100 ரூபாய் தரும்போது, உன்னால் அது முடியாது நீ 10 ரூபாய் தந்தால் போதும் என்பது என்னை அவமானப்படுத்துவது இல்லையா" என்றார் காட்டமாக.

also read : மஞ்சக்காட்டு மைனா.. அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

ஆந்திர அரசின் கட்டண குறைப்பு முடிவால் பாலகிருஷ்ணாவின் அகண்டா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நானியின் ஷியாம் சிங்கா ராய் இன்று வெளியாகியுள்ளது. ஜனவரியில் வெளிவரயிருக்கும் ஆர்ஆர்ஆர், பீம்ல நாயக், ராதே ஷ்யாம் போன்ற பிரமாண்ட படங்களும் பாதிக்கப்படும். இப்போதே மேற்கு கோதாவரியில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது இந்தப் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. நல்ல தீர்வு கிடைக்கும் என ஆந்திர திரையுலகம் நம்புகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Andhra Theatre

அடுத்த செய்தி