நேர்கொண்ட பார்வையுடன் மோதும் 5 படங்கள்!

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் பலமுறை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

news18
Updated: August 7, 2019, 12:08 PM IST
நேர்கொண்ட பார்வையுடன் மோதும் 5 படங்கள்!
அஜித் | நயன்தாரா
news18
Updated: August 7, 2019, 12:08 PM IST
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நாளை வெளிவர இருக்கும் நிலையில் அடுத்த நாளன்று 5 தமிழ்ப்படங்கள் திரைக்கு வர உள்ளன

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவன் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில் படத்தைப் பார்த்த விமர்சகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் நாளை திரைக்கு வரவுள்ளது.


அடுத்த நாளான ஆகஸ்ட் 9-ம் தேதி 5 தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன. நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம், ரீல், சீமபுரம், வளையல், வினை அறியார் ஆகிய 5 படங்களும் வெள்ளியன்று வெளிவர உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் பலமுறை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க: விமர்சகர்களின் பாராட்டு மழையில் நேர்கொண்ட பார்வை - விமர்சனம்

வீடியோ பார்க்க: தன்னம்பிக்கையின் தல

Loading...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...