ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'ரொம்ப தூரம் போய்ட்டியா’ ராம்?! நினைவுகளை மெல்ல வருடும் மயிலிறகு '96'!

'ரொம்ப தூரம் போய்ட்டியா’ ராம்?! நினைவுகளை மெல்ல வருடும் மயிலிறகு '96'!

96

96

ராமும் ஜானுவும் திரைவழியாக நம் வாழ்வில் கலந்து இன்றுடன் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.

  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சத்தமில்லாமல் திரைக்கு வந்து சக்கைப்போடுபோட்ட திரைப்படம் 96. நான்கு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டு இதே நாளில்தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையில் வெளியானது 96. ராமும் ஜானுவும் திரைவழியாக நம் வாழ்வில் கலந்து இன்றுடன் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.

    ஆர்வத்தைத் தூண்டிய தலைப்பு, விஜய் சேதுபதியின் இயல்பான லுக், மீண்டும் 'மெளனம் 'த்ரிஷா என்றெல்லாம் ஒரு சில எதிர்பார்ப்புகள் இருந்தாலும் படத்தின் இசை , 96 மூவிக்கு வேற லெவல் ரீச்சைக் கொடுத்தது. படம் வெளியாவதற்கு முன்மே படத்தின் இசை பட்டித்தொட்டியெங்கும் பரவியது. யார் சார் இந்த இசையமைப்பாளர் என தேடியவர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டார் கோவிந்த் வசந்தா. எந்தப்பாட்டை ரசிக்க என்று குழப்பும் அளவுக்கு அனைத்து பாடல்களுமே உருகும் ரகமாக உருவாக்கினார் கோவிந்த் வசந்தா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பதுபோல அனைத்துவிதமான உணர்ச்சிகளுக்கும் அப்படத்தில் பாடல் உண்டு.

    தனிமை விரும்பிகளுக்கு 'லைஃப் ஆஃப் ராம்' பாடல், காதல் உருக 'காதலே, காதலே' பாடல், வசந்தகாலங்கள், தாபங்களே என ஒவ்வொரு பாட்டும் வேற லெவல். என்னதான் இருக்கு இந்தப்படத்துல என தியேட்டருக்குள் நுழைந்தவர்கள் கிட்டத்தட்ட மனமுருகியே வெளியே வந்தார்கள். சென்னையையும் தஞ்சாவூரையும் மாறி மாறி கேமராவுக்குள் கொண்டு வந்த இயக்குநர் 80ஸ் காதலை 90களில் முன் நிறுத்தி இருப்பார். 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' என்பது போல படம் பார்த்த பலருக்கும் மலரும் நினைவுகளான பள்ளியை தன் முன்னே கொண்டு வந்தார் இயக்குநர் ப்ரேம் குமார்.

    பள்ளியில் ஒரு வித ஈர்ப்புடன் உருவான காதல் காலப்போக்கில் பிரிந்துவிட மீண்டும் பல வருடங்கள் கழித்து அந்தப்பள்ளிக்கு செல்லும் நாயகன் தன் நினைவுகளை மீட்டெடுக்கிறான். காதல் செய்த இடமான பள்ளியே இப்படியான நினைவுகளை சுமக்கும்போது காதலித்தவள் என்ன செய்வாளோ என்ற ஏக்கத்தை நம்முள் கடத்தும்போது, ரீயூனியன் என்ற கதைப்போக்கில் த்ரிஷா வந்து நிற்பார். காலத்தால் பிரிந்த இரண்டு காதலர்களை மீண்டும் காலம் ஒன்றுசேர்க்க, இதுதான் ரியாலிட்டி என்ற க்ளைமேக்சுடன் முடிவடையும் 96.

    96

    நீண்ட வருடங்களுக்கு பிறகு தனக்குப்பிடித்த ஒருவருடன் மனம்விட்டுப்பேசி சிரிக்க ஒரு இரவாக அந்தப்படம் ஒரு இரவில் நடந்துமுடிவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் . இதயத்தில் கைவைத்ததும் பீல் ஆவது, விளக்கொளியில் காற்றில் கரையும் யமுனை ஆற்றிலே பாடல், ரொம்ப தூரம் போய்ட்டியா ராம் என்ற வசனம் ஏற்படுத்தும் வலி என 96 கொடுக்கும் உணர்வு அலாதியானது.

    கதை உருவான சுவாரஸ்யம்..

    96 படத்தை தன் பள்ளி நண்பர்களின் ரியூனியனின் உண்மைக்கதையை கருவாகக் கொண்டே இயக்குநர் பிரேம் உருவாக்கினார். தான் அந்த ரியூனியனில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், ரியூனியனில் இரண்டு காதலர்கள் சந்தித்துக்கொண்ட கதையை சக நண்பர்கள் கூற அடடே என 96கதையை எழுதியுள்ளார் இயக்குநர். அதுவும் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் வீட்டில் சிக்கிக்கொண்ட நேரத்தை பயன்படுத்திக்கொண்ட பிரேம், வெறும் 20 நாட்களில் எழுதி முடிந்த கதை தானால் 96. தமிழில் ஹிட்டடித்த இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 4 ஆண்டுகள் ஆனாலும் இன்று பார்த்தாலும் ஏதோ ஒரு வித நினைவின் சுவடுகளை மெல்ல வருடும் மயிலிறகாவே 96 இருக்கிறது. அதுதான் அப்படத்தின் வெற்றியும் கூட.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: 96 Film, 96 movie