Home /News /entertainment /

Chennai Day : சென்னையை மையப்படுத்தி வெளியான திரைப்படங்கள்

Chennai Day : சென்னையை மையப்படுத்தி வெளியான திரைப்படங்கள்

சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் சில.

சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் சில.

தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வரும் சென்னையை மையப்படுத்தி பல படங்கள் திரைக்கு வந்துள்ளன. அவற்றுள் சில படங்களின் தொகுப்பு-

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்…

    1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையான மதராச பட்டிணம் உருவாக்கப்பட்டது.  இதனை ஆண்டுதோறும் சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 383வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வரும் சென்னையை மையப்படுத்தி பல படங்கள் திரைக்கு வந்துள்ளன. அவற்றுள் சில படங்களின் தொகுப்பு-

    மெட்ராஸ் 



    சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமான ஒன்று. சென்னை பூர்வீக குடிகளின் வாழ்வியலை அரசியல்,காதலோடு கலந்து கொடுத்திருப்பார் பா.ரஞ்சித். 2014-ல் கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் வெளி மாவட்ட மக்களுக்கு சென்னை பற்றிய சில புரிதல்களை அளித்திருக்கும். சாமான்ய மக்களின் வாழ்வில் அரசியல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரித்திருப்பார் இயக்குனர் ரஞ்சித்.

    வட சென்னை



    வட சென்னைப் பகுதி மக்களின் வாழ்வியலைத் தழுவி எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். இதில் குறிப்பிடும்படி மோசமான நபர்களாக வடசென்னை மக்கள் கிடையாது என்ற எதிர்க்குரலும் படத்திற்கு எழுந்தது. மக்களின் வாழ்வியலை சற்று மிகைப்படுத்தி வெற்றி மாறன் பதிவு செய்ததாக விமர்சனங்கள் வந்தன. அதே நேரத்தில் சென்னை பூர்வீக மக்களின் இயல்பான பேச்சுவழக்கு வாழ்வியல் அடிப்படையில் நேர்த்தியான ஆக்சன் த்ரில்லராக வட சென்னை உருவாக்கப்பட்டிருக்கும். 80, 90 களில் நடந்ததைப் போன்ற சம்பவங்களை சுவாரசியமாக இந்த படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் வெற்றி மாறன்.

    மாநகரம்



    இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படம். குறைகள் சில இருந்தாலும், வந்தாரை வாழவைப்பதில் சென்னை தனித்துவம் மிக்கது என்பதை விரிவாக காட்சிப்படுத்தியிருப்பார். முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட்ட திரைப்படம் மாநகரம். 4 முனை கதைகள் க்ளைமேக்ஸில் ஒன்றையொன்று சந்திக்கும் வகையில் திரைக்கதை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு நாளில் நடக்கும் கதை என்றாலும், படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரையில் பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்திருக்கும்.

    புதுப்பேட்டை



    தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் 2006-ல் வெளிவந்த திரைப்படம். எழும்பூர், புதுப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும். நல்ல விஷயங்கள் எதற்கும் இடம் கொடுக்காமல், படம் முழுவதையும், இரத்தத்தால் நிறைத்திருப்பார் செல்வராகவன். அப்பாவி இளைஞனை குடும்பம், சந்தர்ப்ப சூழல்கள் எப்படி தாதாவாக மாற்றுகிறது என்பதை, இயல்பாக செல்வராக எடுத்திருப்பார். பைக் ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு பெயர்போன புதுப்பேட்டை படத்தில் டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கும். கடைசியில் இடம்பெறும் ‘ஒரு நாளில் வாழ்க்கை எங்கும்’ பாடல் வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை 28



    கிரிக்கெட், காதல், காமெடி என கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கும். சென்னையில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருப்பார் இயக்குனர் வெங்கட் பிரபு. யுவன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. சென்னை மந்தை வெளி பகுதியின் பின்கோடான 28யை, படத்தின் டைட்டிலாக பயன்படுத்தியிருப்பார் இயக்குனர். வடசென்னை, தென் சென்னை பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட்டது. ராயபுரம் ராக்கர்ஸ் – ஷார்க்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் முக்கிய காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும்.

    தரமணி



    தென்சென்னை, டைடல் பார்க், ஐடி பணியாளர்களை மையப்படுத்தி சுவாரசியமான கதையை, சென்னையின் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளையும் சொல்லியிருப்பார் இயக்குனர் ராம். 2017-ல் வெளிவந்த இந்த திரைப்படம் சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமான ஒன்று.

    மதராச பட்டிணம்



    1940 களின் சென்னை மதராசபட்டிணத்தை காட்சிப்படுத்தியருப்பார் இயக்குர்ஏ.எல்.விஜய். இந்தியா சுதந்திரம் அடையும் நேரத்தில் சென்னை ஆங்கில கவர்னரின் மகள் எமி ஜாக்சன் ஆர்யா மீது காதல் கொள்கிறார். இவர்களின் காதல் என்ன ஆனது என்பதை அந்த காலத்தின் நிகழ்வுகள், 80 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை, இன்றைய சென்னையின் அன்றைய பகுதிகள் உள்ளிட்டவற்றை படக்குழுவினர் கண் முன் நிறுத்தியிருப்பார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Chennai, Kollywood

    அடுத்த செய்தி